தாக்கரேவுக்கு 'படம் காட்டும்' அமிதாப்!

By Staff

Amitabh Bachan with Bal Thackeray
பால் தாக்கரேவுக்கு தான் நடித்த 'ரன்' படத்தை போட்டுக் காட்டுகிறார் அமிதாப்!

ஷாருக் கான், ஆமிர் கான், சைப் அலி கான் என சிவசேனாக் கட்சியினர் பாய்ந்து கொண்டுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தான் நடித்த ரன் படத்தை பார்க்க சிவசேனா தலைவர் பால் தாக்கரே பிரியப்படுவதால் அவருக்காக பிரத்யேகமாகப் போட்டுக் காட்டவுள்ளாராம்.

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சிவசேனாவின் செயல் தலைவரும், தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரே மும்பையில் பார்த்தார்.

அமிதாப்பின் நடிப்பையும், படத்தையும் பார்த்து ரொம்பவே புளகாங்கிதப்பட்டுப் போய் விட்டாராம் உத்தவ்.

இதுகுறித்து அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் எழுதியுள்ளதாவது...

இப்போதுதான் உத்தவ் ரன் படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்துள்ளார். படத்தையும், எனது நடிப்பையும் எப்படிப் புகழ்வது என்று வார்த்தை வராமல் திகைத்து நின்றார்.

அவர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில் பாலா சாஹேப்பிடமிருந்து (பால் தாக்கரே) போன் வந்தது. ரன் படத்தை நான் பார்க்க வேண்டும். எனக்கு வந்து போட்டுக் காட்டுங்கள். மேலும், என்னை நீங்கள் பார்த்தும் ரொம்ப நாளாகி விட்டது என்று உரிமையுடன் கூறி வீட்டுக்கு வருமாறும் அழைத்தார் என்று கூறியுள்ளார் பச்சன்.

பால் தாக்கேரவுக்காக கண்டிப்பாக தான் பிரத்யேகக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப் போவதாகவும் கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.

நடிப்பில் மட்டுமல்ல, சிவசேனாவின் தாக்குதலில் சிக்குவதிலும் கூட ஷாருக் கான், ஆமிர் கான், சைப் அலி கானை விட அமிதாப்தான் 'சீனியர்'. அவரைத்தான் முதன் முதலில் சிவசேனாவினரும், ராஜ் தாக்கரேவின் கட்சியினரும் கடுமையாக சாடினர், வீட்டில் பீர் பாட்டில்களை வீசியடித்தனர், அவரது மனைவி ஜெயா பச்சன் இந்தியில் பேசியதைக் கடுமையாக விமர்சித்தனர் என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X