ஐஸ்வர்யாவின் படப்பிடிப்பில் கடுப்பேற்றிய பிக் பாஸ் மணிகண்டன்... கோபத்தில் அண்ணனை பயமுறுத்திய அனுபவம்
சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டிரைவர் ஜமுனா என்கிற திரைப்படம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி வெளியாகிறது.
18 ரீல்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.பி.சவுத்ரி அவர்கள் தயாரித்திருக்கும் இந்த படத்தை வத்திக்குச்சி இயக்குநர் கின்சிலின் இயக்கியிருக்கிறார், ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை ஐஸ்வர்யா ராஜேஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

டிரைவர் ஜமுனா
இயக்குநர் கின்சிலின் டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் கதையை கோவிட்டிற்கு முன்பே ஐஷ்வர்யாவிடம் கூறினாராம். இரண்டு ஆண்டு லாக்டவுனுக்கு நடுவே மாட்டிக்கொண்டு சிரமப்பட்டுதான் படத்தை எடுத்து முடித்திருக்கிறோம் என்றும் தயாரிப்பாளர் அதுவரை பொறுமையாக இருந்ததாகவும் அது மட்டுமல்லாமல் திரையரங்குகளில் தான் படத்தை வெளியிடுவேன் என்று உறுதியாக இருக்கிறார் என அவரை பாராட்டியுள்ளார்.

4 ஆண்டுகள் இடைவெளி
இதற்கு முன்னர் 2018-ஆம் ஆண்டு அவருடைய கனா திரைப்படம்தான் திரையரங்கில் வெளியானதாம். அதன் பின்பு வெளியான கா.பெ.ரணசிங்கம், பூமிகா, திட்டம் இரண்டு போன்ற படங்கள் ஓடிடியில் வெளியானதாகவும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் திரையரங்கில் தன்னுடைய படம் வெளியாகிறது என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார்.

தமிழா தெலுங்கா
ஐஸ்வர்யாவின் தாய்மொழி தெலுங்கு என்பதால், பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் தமிழா அல்லது தெலுங்கா என்று கேள்விக்கு பிறந்த ஊரை வைத்துதானே நான் சொல்ல வேண்டும். அப்படி பார்த்தால் நான் தமிழ்தான் என கூறியிருக்கிறார். அதே வேளையில் தனது அப்பா 40 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார், அத்தை 500 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அதனால் தெலுங்கு படத்தில் வாய்ப்பு வந்தாலும் நான் நடிப்பேன், எனக்கு மொழி பேதம் கிடையாது என்று வெளிப்படையாக பேசியுள்ளார். ஐஸ்வர்யாவின் அண்ணன் மணிகண்டன் தற்சமயம் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக இருக்கிறார். அவரும் டிரைவர் ஜமுனா திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பயந்து போன அண்ணன்
ஒருநாள் படப்பிடிப்பில் மணிகண்டன் காரில் இருக்க ஐஸ்வர்யா அந்த காரை ஓட்டுவது போல் ஒரு காட்சி எடுக்கப்பட்டதாம். அப்போது இயக்குநரிடம்,"இவளுக்கு வண்டியே ஓட்ட தெரியாது, இவள நம்பி நா உக்காரணுமா" என நக்கல் அடித்ததாகவும், அதனால் கோபமடைந்து ஹை ஸ்பீடில் காரை ஓட்டி அவனை பயமுறுத்தினேன் என்றும் இருப்பினும் பாதுகாப்பாகத்தான் காரை ஓட்டியதாகவும் ஐஸ்வர்யா அந்த நிகழ்வில் கூறியிருக்கிறார். அண்ணன் இருக்கும்போதே, பிக் பாஸ் வீட்டில் இந்தப் படத்தை புரமோட் செய்வது பற்றியும் திட்டமிடுகிறார்களாம்.


Click it and Unblock the Notifications