For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  டிவி முதல் கல்யாண வீடு வரை....பிக்பாஸ் தமிழ் ப்ரோமோக்கள்...என்னம்மா யோசிக்கிறாங்கப்பா

  |

  சென்னை : தமிழ் டிவி சேனல்களில் இதுவரை நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் என்பது அனைவரும் அறிந்தது தான். தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதிலும் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ளது.

  அடுத்தவரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவருக்குள்ளும் உண்டு. அது தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம் என கூறப்பட்டாலும், இந்த நிகழ்ச்சியில் நடத்தப்படும் போட்டிகள், இந்நிகழ்ச்சிக்காக அளிக்கப்படும் விளம்பரங்கள் ஆகியனவும் இந்நிகழ்ச்சி பலரின் ஃபேவரைட் ஷோவாக இருக்க முக்கிய காரணம்.

  பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 4 சீசன்கள் நிறைவடைந்து 5 வது சீசன் வரும் அக்டோபர் மாதம் துவங்கப்பட உள்ளது. கடந்த 4 சீசன்களைப் போலவே இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான ப்ரோமோக்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகிறது.

  ஆரம்பத்துல போதீஸ் விளம்பரம் மாதிரியே இருந்துச்சு.. பிக்பாஸ் புரமோ.. கதறவிடும் நெட்டிசன்ஸ்! ஆரம்பத்துல போதீஸ் விளம்பரம் மாதிரியே இருந்துச்சு.. பிக்பாஸ் புரமோ.. கதறவிடும் நெட்டிசன்ஸ்!

  வித்தியாசம் காட்டும் ப்ரோமோ

  வித்தியாசம் காட்டும் ப்ரோமோ

  ஒரு சீசனில் இருந்து மற்றொரு சீசனை வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக, 5 சீசன்களின் ப்ரோமோவும் 5 விதங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த ப்ரோமோக்களே நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை தூண்டி வருகின்றன. அதிலும் ஒவ்வொரு சீசனுக்கான ப்ரோமோவிலும் கமல் பஞ்ச் டயலாக்குகளும் மாறி வருகின்றன.

  முதல் சீசன்

  முதல் சீசன்

  முதல் சீசன் துவங்குவதற்கு முன், இந்த நிகழ்ச்சி பற்றிய புரிதலை மக்களிடம் கொண்டு செல்வதற்காக, டிவி.,யில் திடீரென தோன்றும் மீசையில்லாத கமல். அவர் தான் நடித்த வேடங்களை பட்டியலிட்டு விட்டு, இந்த நிஜ முகங்களைக் காட்டுவதற்கான ஷோ என கூறி, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என டயலாக் பேசுவார். இந்த டயலாக் இப்போது வரை மிக பிரபலம். சினிமாக்கள், டிவி சீரியல்கள் என பலவற்றிலும் இது பயன்படுத்தப்பட்டு விட்டது.

  இரண்டாவது சீசன்

  இரண்டாவது சீசன்

  இரண்டாவது சீசனுக்கான ப்ரோமோவில், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முகம். வெளியில் தெரிவது ஒரு முகமாக இருந்தாலும் உண்மையில் வேறு முகம் ஒளிந்துள்ளது என கண்ணாடி முன் நின்று கூறும் கமல். இதுவும் டிவி வழியாக கமல் பேசுவதாகவே அமைக்கப்பட்டது. கண்ணாடியில் பல டைமென்ஷன்களில் கமல் தோன்றுவதாக ப்ரோமோ அமைக்கப்பட்டது.

  மூன்றாவது சீசன்

  மூன்றாவது சீசன்

  மூன்றாவது சீசனில் சற்று வித்தியாசமாக, தெருவில் ஒரு பெண்ணை இடித்து விட்டு ஓடும் இளைஞர், கமல் சொடுக்கு போட்டதும் அனைத்து இயக்கங்களும் நின்று விடுகிறது. அப்போது நடந்து வந்து பேசும் கமல், நாம் பார்ப்பது எல்லாம் நிஜம் இல்லை என கூறுவார்.

  நான்காவது சீசன்

  நான்காவது சீசன்

  கடந்த ஆண்டு நடந்த நான்காவது சீசனுக்கான ப்ரோமோவில், கொரோனா கால எச்சரிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். கடந்த 3 ஆண்டுகளாக உங்களுக்கு பரிட்சயமான இந்த குரல் இப்போது உங்களுக்குள்ளேயே ஒலிக்க துவங்கி விட்டது. தப்புன்னா தட்டிக் கேட்பேன். நல்லதுன்னா தட்டிக் கொடுப்பேன் என்ற டயலாக் பேசினார் கமல்.

  ஐந்தாவது சீசன்

  ஐந்தாவது சீசன்

  இந்த ஆண்டு துவங்க போகும் ஐந்தாவது சீசனுக்கான லேட்டஸ்ட் ப்ரோமோவில் கல்யாண வீட்டில் காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடக்கும் சந்தோஷங்கள், சண்டைகள் ஆகியவற்றை காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் பொருத்தம் பார்த்து பண்ணும் கல்யாணத்திலேயே இத்தனை சண்டை என்றால் இங்கு கேட்கவா வேணும் என்கிறார் கமல்.

  எல்லாமே மாறுதா

  எல்லாமே மாறுதா

  இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியின் லோகோ மாற்றப்பட்டு விட்டது. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம், போட்டியாளர்களுக்கான நேரம் என அனைத்தும் மாற்றப்படுவதாக ஒரு தகவல் கூறப்படுகிறது. இதை மறைமுகமாக கூறுவதற்காக கூட நேரத்தை குறிப்பிட்டு இந்த ப்ரோமோ அமைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

  English summary
  Bigg Boss tamil program team creates different promos for each season. kamal's punch dialogues also differ in these promos. latest promo for season 5 revealed recently and gets good response.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X