»   »  பிரான்ஸைக் கவர்ந்த பில்லா!

பிரான்ஸைக் கவர்ந்த பில்லா!

Subscribe to Oneindia Tamil

1980ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்த்தின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான பில்லா, பிரான்ஸ் நாட்டு திரைப்படஆணையத்தின் இயக்குநரை வெகுவாக கவர்ந்து விட்டது. அந்தப் படத்தின் டிவிடிக்களை தனது ஊரில் போட்டுக்காட்டுவதற்காக அவர் வாங்கிச் சென்றுள்ளாராம்.

பழம்பெரும் தயாரிப்பாளர், நடிகர் பாலாஜி தயாரிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் பில்லா. இதில்ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். பாடல்கள், ரஜினியின் ஸ்டைல், ஆக்ஷன் காட்சிகள் படத்தை சூப்பர்ஹிட் ஆக்கின.

இந்தப் படத்தை மீண்டும் ரீமேக் செய்ய பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி திட்டமிட்டுள்ளார். ரஜினி வேடத்தில்நடிக்க விஜய்யும், அஜீத்தும் விருப்பம் தெரிவித்துள்ளனராம். இருப்பினும் அஜீத்துக்கே வாய்ப்புகள் அதிகம்என்று தெரிகிறது.

இந்த நிலையில் பில்லாவை பார்த்த பிரான்ஸ் நாட்டு திரைப்பட ஆணையத்தின் துணை இயக்குநரான பிராங்கபிரியோட் வியப்படைந்து போனாராம். குறிப்பாக ரஜினி சம்பந்தப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளும், ஆக்ஷன்காட்சிகளும் அவருக்கு பிரமிப்பை கொடுத்ததாம்.

இதையடுத்து பில்லா படத்தின் சில டிவிடிக்களை வாங்கிய அவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள தனதுநண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் போட்டுக் காட்டவுள்ளாராம். முடிந்தால் பில்லாவை பிரெஞ்சு மொழியில்டப் செய்யவும் முயற்சிக்கப் போகிறாராம்.

ஏற்கனவே ரஜினியின் முத்து ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்டது. சந்திரமுகியும் ஜப்பானியமொழியிலேயே திரையிடப்பட்டது. இப்போது பில்லா அப்படியே பிரான்ஸுக்குப் போயுள்ளது.

இதேபோல பிரியோட்டை கவர்ந்த மேலும் இரு தமிழ்ப் படங்கள் விக்ரமின் தூள், சூர்யாவின் கஜினி. சூர்யாவின்நடிப்பைப் பார்த்து பிரியோட் மிரண்டு போய் விட்டாராம். இப்படி ஒரு நடிகர் பிரான்ஸிலேயே இல்லை என்றும்பாராட்டித் தள்ளியுள்ளாராம்.

கஜினியும் பிரெஞ்சு மொழிக்குப் போனாலும் போகலாம் என்கிறார்கள்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil