For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பில்லா டு ஜகமே தந்திரம்.. போலீஸ் படம் மிஸ் ஆனாலும் ஆகும் கேங்ஸ்டர் படங்கள் கன்ஃபார்ம் ஹிட்டுதான்!

  |

  சென்னை: ஹீரோக்களை சூப்பர்ஸ்டார்களாக மாற்றுவது போலீஸ் படங்களும் கேங்ஸ்டர் படங்களும் தான்.

  Recommended Video

  Dhanush மதுரை Gangster எனக்கு Villain • James Cosmo Interview | Karthick Subbaraj

  அதன் காரணமாகத் தான் பல முன்னணி ஹீரோக்களும் இந்த இரண்டு விதமான கதைகளையே பெரும்பாலும் டார்கெட் செய்வார்கள்.

  போலீஸ் படங்கள் சில சமயம் ஹிட் அடிக்க முடியாமல் திணறினாலும் கேங்ஸ்டர் படங்கள் பெரும்பாலும் ஹிட் அடிக்க தவறியதே இல்லை.

  கேங்ஸ்டர்ஸ்

  கேங்ஸ்டர்ஸ்

  எம்.ஜி.ஆரின் குடியிருந்த கோயில் காலம் தொட்டே தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் கதைகள் ஏராளம். கெட்டவன் கிட்ட இருந்து கொள்ளையடிச்சு நல்லது பண்ற கெட்டவன் என்கிற நெகட்டிவ் ஹீரோ கேரக்டரில் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல நடிகர்களும் பட்டையை கிளப்பி உள்ளனர்.

  பில்லா – ரஜினிகாந்த்

  பில்லா – ரஜினிகாந்த்

  அமிதாப் பச்சன் நடிப்பில் இந்தியில் டான் எனும் டைட்டிலில் வெளியான படத்தை தமிழில் 1980ம் ஆண்டு இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி பில்லா எனும் டைட்டிலில் ரீமேக் செய்திருந்தார். அமிதாப் படத்தையே மிஞ்சும் அளவுக்கு பில்லா படத்தின் வெற்றி மிகப்பெரிய அளவில் இருந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற மை நேம் இஸ் பில்லா பாடல் போல இன்னொரு டான் பட பாடல் வெளியாகவே இல்லை என்றே சொல்லலாம்.

  நாயகன் – கமல்

  நாயகன் – கமல்

  கேங்ஸ்டர் படங்களுக்கே தலைவனான தி காட் ஃபாதர் படத்தின் இன்ஸ்பிரேஷன் உடன் ரியல் மும்பை தாதா வரதராஜ முதலியாரின் கதையை கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் படம் தேசிய விருதை தட்டிச் சென்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

  மாணிக் பாட்ஷா

  மாணிக் பாட்ஷா

  பில்லா, நாயகன் படங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு கமர்ஷியல் டானாக வசூல் வேட்டையாடிய படம் என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா படம் தான். 1995ம் ஆண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான பாட்ஷா படம் இந்த வாரம் சன் டிவியில் போட்டால் கூட ஒட்டு மொத்த கூட்டமும் இப்போதான் புதுசா பார்ப்பது போல உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு காந்த சக்தி மாணிக் பாட்ஷாவிடம் உள்ளது.

  கொக்கி குமாரு

  கொக்கி குமாரு

  அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான படம் புதுப்பேட்டை. பக்காவான கேங்ஸ்டர் படமாக அந்த படம் உருவாகி இருந்தது. தனுஷின் ஒல்லியான உடம்பை பார்த்து இவன்லாம் கேங்ஸ்டரா என விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், இன்னமும் புதுப்பேட்டை 2வுக்கும் கொக்கி குமார் ரிட்டர்ன்சுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் வெயிட்டிங்.

  பில்லா – அஜித்

  பில்லா – அஜித்

  ரஜினிகாந்த் நடித்த பில்லா படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் தல அஜித் நடித்த பில்லா. கடந்த 2007ம் ஆண்டு இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான பில்லா திரைப்படம் நடிகர் அஜித்துக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. பிகினி உடையில் நயன்தாரா நடித்திருந்த காட்சிகள் ரிப்பீட் மோடில் பார்க்கப்பட்டன. பில்லா வெற்றியை தொடர்ந்து பில்லா 2 படத்திலும் அஜித் நடித்திருந்தார். ஆனால், எதிர்பார்த்த வெற்றியை அந்த படம் பெறவில்லை.

  கார்த்திக் சுப்புராஜ் படம்

  கார்த்திக் சுப்புராஜ் படம்

  ஜகமே தந்திரம் படத்தை இயக்கி உள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தமிழ்நாட்டின் புதிய கேங்ஸ்டர் இயக்குநராகவே மாறியுள்ளார். அவர் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படம் இதுவரைக்கும் தமிழ் சினிமா பார்க்காத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக இருந்தது. நடிகர் பாபி சிம்ஹா அந்த படத்திற்காக தேசிய விருதை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

  பேட்ட

  பேட்ட

  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அதிகளவில் போலீஸ் கதாபாத்திரங்களை விட கேங்ஸ்டர் கதாபாத்திரங்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படமும் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் படமாகவே இருந்தது. ஃபிளாஷ்பேக்கில் வரும் பேட்ட வேலன் கதாபாத்திரம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தது.

  லண்டன் தாதா

  லண்டன் தாதா

  புதுப்பேட்டை, மாரி உள்ளிட்ட படங்களில் டானாக நடித்திருந்த தனுஷ் மீண்டும் ஒரு பக்கா கமர்ஷியல் கேங்ஸ்டராக அதுவும் சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதாவாக சுருளி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வரும் ஜூன் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. ஏற்கனவே வெளியான அந்த படத்தின் டிரைலரே தோட்டாக்கள் தெறிக்க இருந்த நிலையில், நிச்சயம் ஜகமே தந்திரம் படமும் ஒரு பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Rajinikanth’s Billa to Dhanush’s Jagame Thandhiram many more blockbuster hit Gangster movies in Tamil Cinema entertains the audience over several years.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X