காதலருடன் நள்ளிரவில் பிறந்தநநாள் கொண்டாடிய நடிகை பிபாஷா பாசு
மும்பை: இந்தி நடிகை பிபாஷா பாசு தனது 35வது பிறந்தநாளை காதலர் ஹர்மன் பவேஜாவுடன் கொண்டாடினார்.
இந்தி திரை உலகில் கவர்ச்சிக் கன்னியாக வலம் வருபவர் பிபாஷா பாசு. தமிழிலும் சச்சின் படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்ததுடன் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.
பிபாஷா பாசு இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார்.

நள்ளிரவு பார்ட்டி
பிபாஷா தனது பிறந்தநாளையொட்டி மும்பையில் நள்ளிரவில் தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தார். பார்ட்டியில் தோழி ஒருவரை கட்டிப் பிடித்து போஸ் கொடுத்துள்ள பிபாஷா.

நண்பர்கள்
பிபாஷா கொடுத்த நள்ளிரவு பார்ட்டியில் அவரது நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். அவ்வாறு பார்ட்டிக்கு வந்த நண்பர்கள் சிலருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் பிபாஷா பாசு.

ஷில்பா
நடிகை ஷில்பா ஷெட்டியும், பிபாஷாவும் நல்ல தோழிகள் ஆவர். பார்ட்டிக்கு வந்த ஷில்பா தோழி பிபாஷாவை வாழ்த்தினார். ஷில்பா பார்ட்டிக்கு தனது கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் தங்கை ஷமிதாவுடன் வந்திருந்தார்.

ஹர்மன்
நடிகர் ஹர்மன் பவேஜாவும், பிபாஷாவும் காதலர்கள் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது. இந்நிலையில் ஹர்மன் பிபாஷா கொடுத்த பார்ட்டிக்கு வந்திருந்தார்.

மாதவன்
மாதவனும், பிபாஷாவும் ஜோடி பிரேக்கர்ஸ் என்ற இந்தி படத்தில் நடிக்கையில் நண்பர்கள் ஆகினர். மாதவன் மாதிரி ஒரு கணவன் வேண்டும் என்று பிபாஷா பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் தோழியின் பிறந்தநாள் பார்ட்டியில் மாதவன் கலந்து கொண்டார்.

பெற்றோர்
பிபாஷாவின் பார்ட்டிக்கு அவரது தாயும், தந்தையும் வந்து வாழ்த்தினர்.


Click it and Unblock the Notifications











