'எந்திரன்': ஷங்கர் 'ஓவர்' புளகாங்கிதம்!

By Chakra

Shankar and Rajini
எந்திரன் பற்றிய வெளியாகும் சின்ன தகவல் அல்லது புகைப்படம் கூட எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துவிடுவதாகவும், அதற்காகவே தாம் எந்த புகைப்படத்தையும் வெளியிடாமல் இருப்பதாகவும் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஷங்கர் தனது இணையதளத்தில் எழுதியுள்ளதாவது:

"எந்திரன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மிகத் தீவிரமாக உள்ளதால் நீண்ட நாட்களாக தளத்தில் எதுவும் எழுதவில்லை. அதுமட்டுமின்றி, எந்திரன் குறித்து ஒரு சின்ன தகவல் அல்லது புகைப்படத்தை இங்கு வெளியிட்டால் கூட அது ஏகப்பட்ட ஆர்வத்தைத் தூண்டி, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைக்கிறது.

மித மிஞ்சிய எதிர்ப்பார்ப்பைக் குறைக்கவே புதிய தகவல்கள் எதையும் தளத்தில் தரவில்லை.

ஒரு பாடல் காட்சி படமாக வேண்டியுள்ளது. மற்றபடி இறுதிக்கட்ட எடிட்டிங் உள்ளபட முழுப் படமும் முடிந்து, பின்னணி இசைச் சேர்ப்பு மற்றும் சவுண்ட எஃபெக்ட்ஸுக்காக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ரஸூல் பூக்குட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

கடைசி பாட்டு மட்டும் படமாக்கப்பட வேண்டும். க்ளைமாக்ஸ் மற்றும் சில முக்கிய காட்சிகளில் கிராபிக்ஸ் சேர்ப்பு பணிகள் பாக்கியுள்ளது. மீண்டும் சந்திக்கிறேன்..." என்று கூறியுள்ளார் ஷங்கர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X