கொலை மிரட்டல் - பாடலாசிரியர் ஜாவேத் அக்தருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், வேலை பார்க்கும் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக தாருல் உலூம் தியோபான்ட் அமைப்பு பாத்வா விதித்தது தொடர்பாக அதை விமர்சித்து ஜாவேத் அக்தர் கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அவருக்கு கொலை மிரட்டல்களும் விடப்பட்டுள்ளன. இதையடுத்து அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர பாதுகாப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரது வீட்டில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர் வெளியில் செல்லும்போதும் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்து ஜாவேத் அக்தர் கூறுகையில், இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். எனது பேச்சையும், நடமாட்டத்தையும் குறைக்கவும் மாட்டேன் என்றார்.
Comments
இந்திப் பாடலாசிரியர் கொலை மிரட்டல் ஜாவேத் அக்தர் பாதுகாப்பு bollywoood death threat hindi poet javed akthtar security


Click it and Unblock the Notifications