தனுஷின் ஸ்வீட்ஹார்ட்டுக்கு இன்று 28வது பிறந்தநாள்
மும்பை: இந்தி நடிகை சோனம் கபூர் இன்று தனது 28வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மூத்த மகள் சோனம் கபூர். அவர் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் சாவரியா படம் மூலம் நடிகையானார். அந்த படம் ஊத்திக் கொண்டாலும் சோனம் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்தார்.
குறிப்பாக அவரது உடையலங்காரம் அனைவரையும் அவரை திரும்பிப் பார்க்க வைத்தது. கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சோனம் அழகான உடைகளில் அசத்தினார்.

28வது பிறந்தநாள்
சோனம் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தனுஷின் ஸ்வீட்ஹார்ட்
தனுஷின் முதல் இந்தி படமான ராஞ்சனாவின் நாயகி சோனம் தான். சோனம் ஒரு ஸ்வீட்ஹார்ட் என்று தனுஷும், தனுஷ் மாதிரி கணவன் வேண்டும் என்று சோனமும் தெரிவித்துள்ளனர்.

திரையுலகினர் வாழ்த்து
சோனம் கபூருக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் ஷஹீத் கபூர், பிபாஷா பாசு உள்ளிட்ட ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications