10 முதல் சிவாஜி புக்கிங்
சிவாஜி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வருகிற 10ம் தேதி முதல் தொடங்குகிறது.
சிவாஜி திரைக்கு வர இன்னும் ஒரு வாரமே உள்ளது. படத்தை திரையிட கோலாகல ஏற்பாடுகள் படு வேகமாக நடந்து வருகின்றன. சூப்பர் ஸ்டாரின் படத்தை திரையிட தியேட்டர்கள் தயாராகி வருகின்றன.இந்த நிலையில், சிவாஜி படம் திரையிடப்படும் தியேட்டர்களில் வருகிற 10ம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கவுள்ளது.
சென்னை நகரில் 11 தியேட்டர் வளாகங்களில் சிவாஜி திரையிடப்படவுள்ளது. சத்யம், ஆல்பர்ட், அபிராமி ஆகிய காம்பளக்ஸ்களிலும், பாரத், கமலா, ஏவி.எம்.ராஜேஸ்வரி ஆகிய தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படுகிறது.
இதுதவிர புறநகர்களில் உள்ள 21 தியேட்டர்களிலும் சிவாஜி திரையிடப்படவுள்ளது.
அனைத்துத் தியேட்டர்களிலும் 10ம் தேதி முதல் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிவாஜி திரையிடப்படவுள்ள தியேட்டர்களில் ரஜினியின் பிரமாண்ட கட் அவுட்கள், பேனர்கள் வைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினி ரசிகர் மன்றங்கள் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











