»   »  பூமிகாவின் கவிதைகள்!

பூமிகாவின் கவிதைகள்!

Subscribe to Oneindia Tamil

கவிக் குயிலாக அவதாரம் எடுத்துள்ளார் அழகு மயில் பூமிகா.

ரோஜாக்கூட்டம் மூலம் தமிழுக்கு வந்தவர் பூமிகா சாவ்லா. அழகுக் கவிதையாகதிகழும் பூமிகா, ஏகப்பட்ட கவிதைகளை வார்த்துள்ள கவிதாயினி என்பதுதிரையுலகில் நிறைய பேருக்குத் தெரியாது.

இயற்கையை ரசிப்பது என்றால் பூமிகாவுக்கு பாதாம் கீர் சாப்பிடுவது போல.ஷூட்டிங் போகும் இடத்தில் இயற்கைக் காட்சிகளை ரசிப்பதற்காக தனியாக நேரம்ஒதுக்கி விடுவாராம்.

அதிலும் அந்தி மயங்கும் நேரத்தில், அழகிய வான்வெளியை பார்த்து பிரமித்துபித்துப் பிடித்தவர் போல லயித்துப் போய்க் கிடப்பாராம். அப்போது இதயத்தின் அடிஆழத்திலிருந்து கவிதை ஊற்றி பீறிட்டெழுமாம்.

அப்படிப் பொங்கிப் பெருகி வழிந்தோடிய கவிதைகளை பேனாவில் பிடித்து நிரப்பிபேப்பர்களில் கொட்டி பொக்கிஷம் போல பாதுகாத்து வைத்துள்ளாரர்.

தாய் மொழியான இந்தியிலும், ஆங்கிலத்திலும் இப்படி அவர் எழுதி குவித்துள்ளகவிதைகள் பல நூறு.

இயற்கையைப் போலவே காதல் கவிதைகளைப் படைப்பிதிலும் பூமிகா, பெத்தஆளுதான். காரணம், அவருக்கும் ஒரு காதலர் உண்டு. அந்தக் காதலில் விளைந்தகவிதைகளும் எக்கச்சக்கமாம்.

இப்படி எழுதித் தள்ளிய கவிதைகளை தொகுத்து விரைவில் நூலாக வெளியிடப்போகிறாராம் பூம்ஸ். நெசமாக்கா என்று பூமிகாவிடம் கேட்டால், ஆமாம் என்று உதடுநெளித்து அழகாக சிரிக்கிறார்.

எனது கவிதைகளை தொகுத்து வைத்துள்ளேன். நான் எழுதியவற்றிலேயே பெஸ்ட்கலெக்ஷன் இவை. விரைவில் புத்தகமாக வெளி வரும் என்கிறார் அலைபாயும்கூந்தலை அழகாக அடக்கியபடி.

தமிழ் பக்கம் வர மாட்டேளா இனிமே என்று கேட்டதற்கு சில்லுன்னு ஒரு சிரிப்பைசிந்திய பூமிகா, அப்படியெல்லாம் இல்லை. நல்ல கேரக்டர்களில் மட்டுமே நடிப்பதுஎன்ற முடிவில் உள்ளேன்.

சில்லுனு ஒரு காதல் படத்தில் எனது கேரக்டர் ரொம்பப் பிடித்திருந்தது. அதுபோன்றகேரக்டர்களில் நடிக்கவே ஆர்வமாக உள்ளேன்.

இப்போது இந்தியில் பேனாம், காந்தி மை பாதர் என இரு படங்களில் நடித்துவருகிறேன். இரண்டிலுமே எனக்கு அட்டகாசமான கேரக்டர்கள் என்கிறார் அடக்கமாக.

பூமிகா சொன்னா பூமியே சொன்ன மாதிரி தான்..

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil