»   »  யோகா நிபுணரைக் காதலிக்கும் பூமிகா!

யோகா நிபுணரைக் காதலிக்கும் பூமிகா!

Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டிலிருந்து மும்பைக் கரையோரம் ஒதுங்கிய நடிகை பூமிகா யோகா நிபுணர் ஒருவரை தீவிரமாக காதலித்து வருகிறாராம்.விரைவில் இருவருக்கும் கெட்டி மேளம் கொட்டப் போகிறது.

ரோஜாக்கூட்டத்தில் ஸ்ரீகாந்துடன் அறிமுகமானவர் தான் இந்த பூமிகா. முதல் படமே ஹிட்டானதால் ராசியான நடிகை என்ற பெயர்இவருக்கு கிடைத்தது. இதனால் அடுத்த படத்திலேயே பத்ரி படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார்.

இதற்குப் பிறகு பூமிகாவுக்கு அவ்வளவாக படங்கள் புக்காகவில்லை. இதனால் மெதுவாக தெலுங்கு, இந்தி என ஒதுங்க ஆரம்பித்தார்.தெலுங்கில் எஸ்ஜே சூர்யா இயக்கிய குஷியில் நடித்தார். அந்தப் படம் நன்றாக ஓடவே தெலுங்கில் முன்னணி நடிகையானார்.

இதன் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தெலுங்கில் பிசியாக இருந்த போதே பாலிவுட்டிலும் லேசாக கால்பதித்து பார்த்தார். அங்கும் பூமிகாவின் ராசி ஒர்க் அவுட் ஆனது. இதனால் பாலிவுட்டிலும் பரபரப்பாக பல படங்களில் புக்கானார்.

தற்போது இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஜெய் சிரஞ்சீவா என்ற படத்திலும், இந்தியில் சில்சிலா என்ற படத்திலும் நடித்துவருகிறார். இது தவிர மேலும் சில இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

ஒரு புறம் முன்னணி நடிகையாக தெலுங்கு, இந்திப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பூமிகா, இப்போது காதல் வலையில்விழுந்துள்ளாராம். உலகப் புகழ் பெற்ற யோகா கலைஞரான பாரத் தாகூர் என்பவரைத் தான் இவர் தீவிரமாக காதலித்து வருகிறார்.

இவர் நடித்துள்ள இந்திப் படமான சில்சிலாவின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது. அப்போது தான்பூமிகாவின் காதல் வெளியுலகுக்கு தெரிய வந்தது. கேசட் வெளியீட்டு விழாவில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

ஒன்றாக கலந்து கொண்டது மட்டுமல்ல, அடுத்தடுத்து மிகவும் நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள். இது மேடையிலும், அரங்கத்திலும் இருந்தபலரது கண்களை உறுத்தியது வேறு விஷயம்.

கடந்த சில மாதங்களாக இருவரும் உயிருக்குயிராக காதலித்து வருகிறார்கள். பூமிகா படப்பிடிப்புக்காக எங்கு சென்றாலும் தினமும்போனில் பேசாவிட்டால் காதலர்களுக்கு தூக்கமே வராதாம்.

தாகூருடனான காதல் குறித்து அவரிடமே கேட்டோம். முதலில் அப்படியா என்று நழுவப்பார்த்தவர், பிறகு மழுப்ப ஆரம்பித்தார். நாங்கள்நல்ல நண்பர்கள். மற்றபடி வேறு எதையும் இப்போதைக்கு கூற விரும்பவில்லை என்கிறார்.

பூமிகாவுடனான நெருக்கம் குறித்து தாகூரின் நெருங்கிய நண்பர்களும் மறுக்கவில்லை. இருவரும் நல்ல நண்பர்கள் என்பதில் எந்தசந்தேகமுமில்லை. ஆனால் அவர்கள் காதலிக்கிறார்களா என்பதைப் பற்றி எங்களுக்கு என்ன தெரியும் என்கிறது நண்பர்கள் வட்டாரம்.

ஆனாலும் விரைவில் பூமிகா-தாகூர் திருமணம் நடைபெறும் என்பதே அதிகாரப்பூர்வ தகவல்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil