பில்லாவுக்காக 'பூட்' லேட்!

By Staff

Bindu in Boot
அஜீத்தின் பில்லா படத்திற்காக சுரேஷ் கோபி நடித்துள்ள பூட் மலையாளப் படத்தை லேட்டாக ரிலீஸ் செய்ய பிரமீட் சாய்மீரா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

பிரமீட் சாய்மீரா நிறுவனம் முதல் முறையாக மலையாளத்தில் தயாரித்துள்ள படம் பூட். சுரேஷ் கோபி நாயகனாக நடித்துள்ளார். ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையே இப்படம் திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் படத்திற்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஜனவரி 11ம் தேதிக்கு பட ரிலீஸை தள்ளி வைத்துள்ளது பிரமீட் நிறுவனம்.

இந்த தள்ளிவைப்புக்கு இன்னொரு காரணமும் உள்ளது. அதாவது கேரளாவில் அஜீத்தின் பில்லாவை திரையிடும் உரிமையையும் பிரமீட் நிறுவனம்தான் பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் பில்லாவையும், பூட்டையும் வெளியிட்டால் சரியாக இருக்காது என்பதால்தான் முதலில் பில்லாவையும், பிறகு பூட்டையும் வெளியிடத் தீர்மானித்ததாம் பிரமீட்.

பிரமீட் நிறுவனத்திற்கு கேரளாவில் 200 தியேட்டர்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பூட் தள்ளிவைப்புக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது பூட் என்ற பெயரை வேறு ஒரு தயாரிப்பாளரும் பதிவு செய்து வைத்துள்ளாராம். இந்த மேட்டர் இப்போதுதான் தெரிய வந்ததாம் பிரமீடுக்கு. இதையடுத்து பிரச்சினை ஏற்படாமல் டைட்டிலுக்கு தீர்வு கண்டு விட்டு பிறகு படத்தை வெளியிடலாம் என்ற எண்ணமும், பூட் தள்ளிப் போக இன்னொரு காரணமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X