twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷா.. 2021ம் ஆண்டு வசூல் வேட்டை நடத்திய டாப் 5 தமிழ் நடிகர்கள்.. முதலிடம் யாருக்கு?

    |

    சென்னை: 2021ம் ஆண்டு தமிழ் சினிமா உலகுக்கு கொரோனா பரவல் காரணமாக மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது.

    2020ம் ஆண்டை போலவே 2021ம் ஆண்டிலும் சினிமா தியேட்டர்கள் முடக்கப்பட்டன.

    பல முன்னணி நடிகர்கள் ஒடிடியிலேயே நேரடியாக படத்தை ரிலீஸ் செய்தனர். சில முன்னணி நடிகர்கள் தியேட்டரில் படத்தை வெளியிட்டாலும் சில வாரங்களில் ஒடிடி ரிலீசுக்கு ஓடும் நிலை உருவானது.

    இதில், 2021ம் ஆண்டில் பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷாவாக மாறிய டாப் 5 ஹீரோக்களின் லிஸ்ட்டை இங்கே பார்ப்போம்.

    திடீரென வந்த அந்த அறிவிப்பு.. ஆர்.ஆர்.ஆர் மற்றும் வலிமை படங்கள் திட்டமிட்டபடி வெளியாகுமா?திடீரென வந்த அந்த அறிவிப்பு.. ஆர்.ஆர்.ஆர் மற்றும் வலிமை படங்கள் திட்டமிட்டபடி வெளியாகுமா?

    தனுஷ் – கர்ணன்

    தனுஷ் – கர்ணன்

    2021ம் ஆண்டில் இந்த டாப் 5 வசூல் வேட்டையில் 5வது இடத்தை பிடித்துள்ள நடிகர் தனுஷ். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான கர்ணன் மீண்டும் போடப்பட்ட லாக்டவுன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் வசூல் பாதிப்பை சந்தித்தது. 40 முதல் 45 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 60 முதல் 62 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    சிம்பு – மாநாடு

    சிம்பு – மாநாடு

    2021ம் ஆண்டில் இந்த டாப் 5 வசூல் வேட்டையில் 4வது இடத்தை பிடித்துள்ள நடிகர் சிம்பு. பல ஃபிளாப்கள், ரெட்கார்டு என ஏகப்பட்ட தடைகளுக்கு பிறகு தனது விடா முயற்சியால் விட்ட இடத்தை பிடிக்க ரிப்பீட் மோடில் உழைத்த நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் சுமார் 100 கோடி கிளப்பில் இணைந்ததாக கூறப்படுகிறது. இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் சிம்புவுக்கு சரியான கம்பேக் கொடுத்த படம் மாநாடு.

    சிவகார்த்திகேயன் – டாக்டர்

    சிவகார்த்திகேயன் – டாக்டர்

    ரியாலிட்டி ஷோவில் காமெடி நடிகனாக அறிமுகமாகி விஜய் டிவியில் தொகுப்பாளராக மக்கள் மனதை கொள்ளையடித்த சிவகார்த்திகேயன் கீழ இருந்து மேல ஏறி வந்துட்டானே என்பதற்கு இணையாக 100 கோடி எலைட் கிளப்பில் டாக்டர் திரைப்படத்தின் மூலம் இணைந்து கோலிவுட்டின் புதிய பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷாவாக மாறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். 2021ல் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

    ரஜினிகாந்த் – அண்ணாத்த

    ரஜினிகாந்த் – அண்ணாத்த

    70 வயதிலும் இப்போ உள்ள முன்னணி நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக கெத்து காட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான அண்ணாத்த திரைப்படம் விமர்சன ரீதியாக அடிவாங்கினாலும், ரஜினிகாந்த் எனும் ஒற்றை பெயருக்காக திரையரங்குகளில் மக்கள் கூட்டத்தை வரவழைத்து பாக்ஸ் ஆபிஸில் 240 கோடி வரை வசூல் ஈட்டி 2ம் இடத்தை பிடித்துள்ளது.

    விஜய் – மாஸ்டர்

    விஜய் – மாஸ்டர்

    கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷாவாக தொடர்ந்து கெத்து காட்டி வருகிறார் தளபதி விஜய். 50 சதவீத இருக்கைகளுடன் படத்தை வெளியிடலாமா? மற்ற பெரிய படங்கள் எல்லாம் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த நிலையில், தில்லோடு வந்து தியேட்டரில் மக்கள் கூட்டத்தை வரவழைத்த நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 300 கோடி வசூலை தாண்டியதாக கூறப்படும் நிலையில், இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

    வலிமையுடன் வரும் அஜித்

    வலிமையுடன் வரும் அஜித்

    டோலிவுட் சினிமா எல்லாம் 2000 கோடி வசூலை கடந்து விட்ட நிலையில், போட்டிகள் மற்றும் பொறாமைகள் இல்லாமல் தமிழ் சினிமாவின் வசூலையும் ஆயிரம் கோடிகளை நோக்கி இந்த பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷாக்கள் அழைத்து செல்ல வேண்டும். இந்த ஆண்டு பொங்கலுக்கு வலிமையுடன் வருகிறார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vijay, Rajinikanth, Sivakartikeyan, Simbu and Dhanush are overcomes and helps to Cinema theaters with their powerful Box office movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X