ஸ்பெஷல்ஸ்
இயக்குனர் ஷங்கர் பயங்கர குழப்பத்தில் இருக்கிறாராம். "பாய்ஸ்" படத்தை ஆரம்பித்த வேளை சரியில்லை என் று கூட புலம்பி வருகிறாராம்.
முதல்வன் படத்தை அனில்கபூரை வைத்து இந்தியில் ரீமேக் செய்து சொந்தமாக தயாரித்து ரிலீஸ் செய்தார் ஷங்கர். அனில் கபூர் எந்த மாநிலத்துக்கு முதல்வர் என்று புரியாமல் இந்தி பேசும் மாநிலங்கள் அனைத்திலும் அந்தப் படம் ஊத்திக் கொண்டது.
செம அடி வாங்கிக் கொண்டு மீண்டும் கோடம்பாக்கத்துக்கு ஓடி வந்தார் ஷங்கர்.
எதையுமே ரொம்ப வித்தியாசமாக செய்யும் அவர் தனது அடுத்த படத்துக்கு சுத்த தமிழில் பாய்ஸ் என்று பெயர் வைத்தார்.
பேரே வித்தியாசமா இருக்கா என்று தனக்குத் தானே பாராட்டு கொடுத்துக் கொண்ட அவர் தமிழ் சினிமாவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போகப் போகும் படம் இது என்றார்.
இந்தப் படத்துக்காக புது முகங்கள் 6 பேரைப் பிடித்து வித்தியாசமான ஸ்டில்ஸ் எல்லாம் எடுத்து பத்திரிக்கைகளுக்கு கொடுத்து பாய்ஸ் படம் பெரிய லெவல்ல வரப் போகுது என்று கூறிக் கொண்டிருந்தார்.
படப்பிடிப்பும் நடந்தது. ஆனால், திடீரென படப் பிடிப்பை நிறுத்திவிட்டார் சங்கர். திடீரென ஷங்கருக்கு கதையில் திருப்தி இல்லாமல் போய்விட்டதாம்.
கதையை மாற்றி எடுப்பதா, அல்லதா படத்தை அப்படியே டிராப் செய்து விட்டு வேறு கதையை படமாக்குவதா என்ற பெரும் குழப்பத்தில் இருக்கிறாராம் ஷங்கர்.
எல்லாம் இந்தி கொடுத்த பாடம் தான் காரணமாம்.


Click it and Unblock the Notifications











