»   »  பிருந்தா பரேக்கின் கவர்ச்சி பிரேக்!

பிருந்தா பரேக்கின் கவர்ச்சி பிரேக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பையிலிருந்து வந்துள்ள லேட்டஸ்ட் கவர்ச்சிப் புயல் பிருந்தா பரேக். ஆள் படு அட்டகாசமாக இருக்கிறார்.

நச்சென்ற கவர்ச்சியும், பார்த்தவுடன் பச்செக்கென்று மனதைக் கவ்வும் கிளர்ச்சியும் கொண்ட பிருந்தா பரேக், எல்லா கவர்ச்சிநடிகைகளையும் போல, தமிழ் மூலம் இந்தியத் திரையுலகில் கால் ஊன்ற முடிவு செய்து சென்னைக்கு வந்துள்ளார்.

குணால், மோனல் ஜோடியைப் போட்டு "பார்வை ஒன்றே போதுமே என்ற படத்தை இயக்கிய முரளி கிருஷ்ணா அடுத்து ஒருபடத்தைத் தமிழில் இயக்குகிறார். அப்படத்தை தயாரிப்பது ரோஹன்.

ரோஹன் என்றால் நிறையபேருக்குத் தெரியாது. காந்தக் கண் அழகி ஷெரீனின் முன்னாள் காதலர் என்றால் சட்டென்றுஞாபகத்திற்கு வரும். ஷெரீனின் காதலராக இருந்து இப்போது வெறும் நண்பராக மட்டுமே இருப்பதாக கூறிக் கொள்ளும்ரோஹன், திடீரென படத் தயாரிப்பாளரானது எப்படி என்பதை தனி நியூஸாகவே கொடுக்கலாம்.

நமக்கு இப்போது ரோஹன் முக்கியம் அல்ல, அவரது புதிய படத்தில் குத்தாட்டம் போடப் போவது பிருந்தா பரேக் தான்என்பதால் இப்போதைக்கு ரோஹனை மறந்து விட்டு பிருந்தாவைப் பார்ப்போம்.

ஒல்லிக் குச்சி உடம்புக்காரியாக இருக்கும் பிருந்தா பரேக், மும்பையில் மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறாராம். அங்கிருந்துநேரடியாக கோலிவுட்டில் கால் பதிக்கும் இவர், கவர்ச்சிக்கு வானமே எல்லை என்ற லட்சியத்தைக் கொண்டவர்.

கவர்ச்சி காட்ட வேண்டும் என்றால் முழுசாக காட்டி விட வேண்டும். பாதிக் கவர்ச்சி, கதைக்கேற்ற கவர்ச்சி என்றெல்லாம்சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்று படு ஓபனாக பேசுகிறார்.

கவர்ச்சி என்றாலே உடலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுதான் என்று விளக்கம் கூறும் பரேக், சினிமாவில் கவர்ச்சி இல்லாமல்ஒன்றையும் சாதிக்க முடியாது என்றும் கூறுகிறார்.

ரோஹனிடம் படத்தில் தனக்கு காஸ்ட்யூமுக்காக அதிகம் செலவழிக்க வேண்டாம் என்று முதலிலேயே கூறி விட்டாராம். கவர்ச்சிநடிகையாக மட்டுமே தான் இருக்கப் போவதால்,

குறைந்த அளவு காஸ்ட்யூமில் நிறைந்த அளவு கவர்ச்சியை வாரி வழங்கத் தயாராக இருப்பதாக கூறும் பரேக்குக்கு குத்தாட்டம்என்றால் அல்வா சாப்பிடுவது போலவாம்.

ஒரு பாட்டுக்குத்தான் இதில் பரேக் ஆடுகிறார் என்றாலும் பத்து குத்துப் பாட்டுக்குச் சமமான கவர்ச்சி அதில் பொதிந்திருக்கிறதாம்.

பிருந்தா பரேக்கின் கவர்ச்சி "பிரேக்கைப் பார்த்து விட்டு யாராவது குத்த திலகம் என்று அவருக்கு பட்டம் கொடுக்காமல்இருந்தால் சரி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil