டைவர்ஸ் கேட்கும் பிரிட்னி ஸ்பியர்ஸ்

By Staff

பாப் ஸ்டார் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது கணவரும், டான்ஸருமான கெவின் பெடர்லினைவிவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். தனக்கு விவாகரத்து வழங்கக் கோரி வழக்குதொடர்ந்துள்ளார்.

பிரிட்னிக்கும், கெவினுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. 2மாதங்களுக்கு முன்புதான் அவர்களின் 2வது குழந்தை பிறந்தது. இந்த நிலையில்பிரிட்னி விவாகரத்து கோரியுள்ளது பாப் ரசிகர்களிடையே பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

தனக்கும், கெவினுக்கும் இடையே தீர்க்கவே முடியாத அளவுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே விவாகரத்து வழங்குமாறும் தனதுமனுவில் பிரிட்னி கூறியுள்ளார். லாஸ் ஏஞ்சலஸ் உச்சநீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

தனக்கும், பெடர்லினுக்கும் பிறந்த இரண்டு குழந்தைகளையும் தன்னுடனேயேவைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் பிரிட்னி தனது மனுவில்கூறியுள்ளார். பிரிட்னியின் முதல் குழந்தையான சீன் பிரட்சனுக்கு 1 வயதாகிறது.செப்டம்பர் 12ம் தேதி ஜேம்ஸ் ஜெய்டன் என்ற இரண்டாவது குழந்தை பிறந்தது.

பெடர்லின் தனது குழந்தைகளை அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றும்பிரிட்னி கூறியுள்ளார். பிரிட்னிக்கும், பெடர்லினுக்கும் இடையே கடந்த சிலமாதங்களாகவே பிரச்சினை இருந்து வந்தது.

கடந்த ஜூலை மாதம் நேஷனல் என்கொரைர் என்ற பத்திரிக்கையில், பெடர்லினைவிவாகரத்து செய்ய பிரிட்னி திட்டமிட்டுள்ளார் என செய்தி வெளியானது. ஆனால்,அதை பிரிட்னி மறுத்தார். அத்தோடு, நேஷனல் என்கொரைர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கோரினார். இதையடுத்து அப்பத்திரிக்கை மன்னிப்பு கேட்டதுநினைவிருக்கலாம்.

பெடர்லினுக்கு, பிரிட்னி 2வது சம்சாரம் ஆவார். பிரிட்னியை மணப்பதற்கு முன்புஷாரா ஜாக்சன் என்ற நடிகையுடன் நெருக்கமாக இருந்தார் பெடர்லின். அவர் மூலம்இரண்டு குழந்தைகளும் பிறந்தன. அதன் பின்னர் ஷாராவை பிரிந்து பிரிட்னியுடன்இணைந்தார்.

அதேபோல ஸ்பியர்ஸுக்கும், பெடர்லின் இரண்டாவது கணவர் ஆவார். ஏற்கனவேதனது பள்ளிக் கூடத் தோழனை முதலில் மணந்த ஸ்பியர்ஸ் உடனடியாக அவரைவிவாகரத்து செய்து விட்டார்.

லைட்டா தலை சுற்றுவது போல இருக்கிறதா? அங்கெல்லாம் இதெல்லாம்சகஜமய்யா..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X