அஜீத்தின் இன்னொரு ஜோடியாக பிரேசில் அழகி புருனா!

பில்லா - 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபத்தில் நடைபெற்று முடிந்தது.
டேவிட் எப்படி பில்லாவாக மாறினான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இந்தக் காட்சிகளை தூத்துக்குடியில் வைத்து படமாக்குகிறார்கள். இதற்காக பில்லா குழு இப்போது தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளது.
இதன் அடுத்த கட்டம் கோவா, பாண்டிச்சேரி மற்றும் ரஷியாவில் படமாக்கப்படுகின்றன.
சக்ரி டோலட்டி இயக்கும் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். அதில் ஒருவர் டெல்லியைச் சேர்ந்த மாடலான ஹூமா குரோஷி. மற்றொருவர் யார் என்ற தகவல் வெளியாகாமல் சஸ்பென்ஸாக இருந்து வந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியான புருனா அப்துல்லா என்ற கவர்ச்சி பதுமையை மற்றொரு கதாநாயகியாக்கி இருக்கின்றனர்.
இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் புருனாவும் பங்கேற்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications