twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நம்ப முடிகிறதா?..ரூ.2 கோடியில் பொன்னியின் செல்வன் தயாரிப்பு..33 ஆண்டுகளுக்கு முன் கமல் அளித்த பேட்டி

    |

    சென்னை: பொன்னியின் செல்வன் டிரெய்லர் வெளியாகிய நேரத்தில் பொனியின் செல்வனை எடுக்க கமல்ஹாசன் எடுத்த முயற்சிகள் குறித்த பழைய பேட்டி வைரலாகி வருகிறது.

    எம்ஜிஆர் பெரும் முயற்சி எடுத்து முடியாமல் போன பொன்னியின் செல்வன் கதையை தயாரிக்க கமல் முயற்சி எடுத்தார். ஆனால் அதுவும் முடியாமல் போனது.

    கமல் மணிரத்னம், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் இணைந்து உருவாகவிருந்த பொன்னியின் செல்வன் குறித்து 30 ஆண்டுகளுக்கு முன் கமல் பேட்டி அளித்துள்ளார்.

    ராஜராஜ சோழனாக நடிக்க மணிரத்னம் சொன்ன அறிவுரை, நடிகர்களுக்குள் போட்டி: மனம் திறந்த ஜெயம் ரவிராஜராஜ சோழனாக நடிக்க மணிரத்னம் சொன்ன அறிவுரை, நடிகர்களுக்குள் போட்டி: மனம் திறந்த ஜெயம் ரவி

    பொன்னியின் செல்வன் எம்ஜிஆர் எடுத்த பெரும் முயற்சி

    பொன்னியின் செல்வன் எம்ஜிஆர் எடுத்த பெரும் முயற்சி

    பொன்னியின் செல்வன் நாவலை 1950 களில் கல்கி கிருஷ்ணமூர்த்தி தொடராக எழுதினார். எம்ஜிஆர் இக்கதையின் உரிமையை அந்தக்காலத்திலேயே பெரும் தொகை கொடுத்து உரிமையை வாங்கினார். வந்திய தேவனாக தான் நடிக்க ஆசைப்பட்டு திரைக்கதையை எழுதும் பொறுப்பை மகேந்திரன் உள்ளிட்ட சிலரிடம் ஒப்படைத்தார். ஆனால் அது நிறைவேறாமலேயே போனது. பாரதிராஜா இடையில் முயன்றார், 30 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் மீண்டும் பெரும் முயற்சி எடுத்து பொன்னியின் செல்வனை தயாரித்து நடிக்க முடிவு செய்தார்.

    விக்ரம் பட மொத்த தயாரிப்புச் செலவே ரூ.1 கோடி தான் நம்புவீர்களா?

    விக்ரம் பட மொத்த தயாரிப்புச் செலவே ரூ.1 கோடி தான் நம்புவீர்களா?

    பொன்னியின் செல்வன் படம் தயாரிப்பு செலவு, இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர் நடிகைகள், கேமராமேன் மற்றும் மற்ற ஏற்பாடுகள் குறித்து கமல்ஹாசன் விரிவாக 30 ஆண்டுகளுக்கு முன் பத்திரிக்கையில் பேட்டி அளித்துள்ளார். 1990 களின் இறுதி காலக்கட்டத்தில் வி.எஃப்.எக்ஸ் தொழில் நுட்பம் உள்ளிட்ட இப்போதுள்ள தொழில் நுட்பங்கள் இல்லாத காலத்திலும், ஹாலிவுட் தொழிற்நுட்பக்கலைஞர்களை அழைத்து வந்து படத்தில் வேலை செய்ய வைக்க முடிவெடுத்துள்ளார். அன்று படத்தயாரிப்புக்காக கமல் திட்டமிட்ட செலவு எவ்வளவு தெரியுமா சொன்னால் நம்ப மாட்டீர்கள் மொத்தம் 3 கோடி ரூபாய். ரூபாய் மதிப்பு அந்த அளவுக்கு அன்று இருந்தது. விக்ரம் படத்தின் மொத்த செலவே ரூ.1 கோடி தான் என்றால் நம்ப முடிகிறதா?

    30 ஆண்டுகளுக்கு முன் பொன்னியின் செல்வன் தயாரிப்புச் செலவு ரூ.2 கோடி தானாம்

    30 ஆண்டுகளுக்கு முன் பொன்னியின் செல்வன் தயாரிப்புச் செலவு ரூ.2 கோடி தானாம்

    பொன்னியின் செல்வனை தயாரிக்க ரூ.2 கோடி ஆகும். இது திட்டமிட்டு செய்தால் மட்டுமே, ஆனால் அவ்வப்போது வரும் செலவு திட்டமிடலில் தவறு நேர்ந்தால் தயாரிப்புச் செலவு 3 மடங்கு அதாவது 6 கோடி ரூபாய் ஆகிவிடும் என அன்று பேட்டி அளித்துள்ளார். ஆனால் அதிக அளவு தயாரிப்புச் செலவு ஆகும் என்பதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் 32 ஆண்டுகள் கழித்து தற்போது கமல் யோசித்த அதே இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வனை இயக்கியுள்ளார். இன்றுள்ளதைபோல் கார்பரேட் நிறுவனங்கள் அன்றிருந்திருந்தால் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சத்யராஜ், பிரபு, விஜயகாந்த் என பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்து 30 ஆண்டுகளுக்கு முன்னரே பொன்னியின் செல்வன் படம் வெளியாகியிருக்கலாம் யார்கண்டது?

    30 ஆண்டுகளுக்கு முன் பொன்னியின் செல்வன் குறித்து கமல் அளித்த பேட்டி

    30 ஆண்டுகளுக்கு முன் பொன்னியின் செல்வன் குறித்து கமல் அளித்த பேட்டி

    பொன்னியின் செல்வன் படத்தை தான் தயாரிக்கவிருப்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் 30 ஆண்டுகளுக்கு முன் கல்கி வார இதழில் அளித்த பேட்டி இதோ, "முஹல் ஏ ஆசம், உத்சங் போன்ற சரித்திர படங்களை பார்த்து நான் பிரமித்து இருக்கிறேன் தமிழில் அந்த மாதிரி படங்கள் வருவதில்லையே என் ஆதங்கப்பட்டு இருக்கிறேன். என்னை கேட்டால் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பிறகு தமிழில் நல்ல சரித்திர படம் வெளியாகவில்லை என்றே சொல்வேன். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் கூட பாண்டியனை விட பளிச்சென்று தெரிந்தவர் எம்ஜிஆர் அவர்கள் தான். எனவே தமிழில் ஒரு நல்ல சரித்திரப்படம் பண்ண வேண்டும் என்கிற எண்ணமும் ஆசையும் எனக்குள் துளிர் விட்டு வளர ஆரம்பித்தது.

    மணிரத்னம், பிசி.ஸ்ரீராமுடன் விவாதித்த கமல்

    மணிரத்னம், பிசி.ஸ்ரீராமுடன் விவாதித்த கமல்

    இது விஷயமாக டைரக்டர் மணிரத்தினம், கேமரா மேன் ஸ்ரீராம் ஆகியோருடன் நான் பலசமயம் விவாதித்து இருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு வாதத்தின் போதுதான் பொன்னியின் செல்வனை சினிமாவாக எடுத்தால் என்ன என்றார் மணிரத்தினம். அதுவரை நான் பொன்னியின் செல்வதை படித்து ரசித்ததோடு சரி. சினிமாவாக எடுப்பது பற்றி துளியும் சிந்தித்ததே இல்லை என்பதால் பொன்னியின் செல்வனை சினிமாவாக எடுப்பது சாத்தியம்தானா? என்கிற கேள்வி எழுந்தது.அந்த கேள்விக்கான காரணங்களை ஒவ்வொன்றாக அவர் அலச ஆரம்பித்தோம். சாத்தியம்தான் என்ற முடிவுக்கு வந்தோம்.

    ஒரு பாகமா? இரண்டு பாகமா? ஒரே பாகம் தான் முடிவெடுத்த கமல்

    ஒரு பாகமா? இரண்டு பாகமா? ஒரே பாகம் தான் முடிவெடுத்த கமல்

    முதலில் எங்களை பிரம்மிக்க செய்த விஷயம் நாவலின் நீளம் 5 பாகங்களை கொண்ட பிரமாண்டமான அந்த நாவலின் கதையை எப்படி மூன்று மணி நேரம் சினிமாவுக்குள் அடைக்க முடியும் என யோசித்தோம். பேசாமல் காட்பாதர் படத்தை போல பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக வெளியிட்டு விடலாமா என்கிற யோசனையை பரிசீலித்தோம். அப்படி வெளியிடும் பட்சத்தில் முதல் பாகத்தை எடுத்து வெளியிட்ட பிறகு, இரண்டாம் பாகத்தை எடுத்து வெளியிடுவதா? அல்லது இரண்டு பாகங்களையும் ஒரேடியாக தயாரித்து முடித்துவிட்டு இரண்டையும் ஒரே சமயத்தில் வெளியிடுவதா? எந்த பாகத்தில் அதை எதை சொல்வது இவற்றையெல்லாம் தீவிரமாக யோசித்து கடைசியில் ஒரே திரைப்பட படமாய் எடுப்பதுதான் நல்லது என்று முடிவெடுத்தோம். (தற்போது வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ளது)

    வி.எஃப்.எக்ஸ் இல்லாத காலத்தில் திட்டமிட்ட கமல்

    வி.எஃப்.எக்ஸ் இல்லாத காலத்தில் திட்டமிட்ட கமல்

    இரண்டாவது காட்சிகளின் அமைப்பு, நாவலில் எழுதப்பட்டுள்ளது நான்கைந்து பக்க வர்ணனைகளை கூட படமாக எடுக்கும் போது சில காட்சிகளில் காட்டிவிடலாம் என்பது ஒரு அனுகூலம் என்றால் கதாபாத்திரங்களின் மன உணர்வுகளை எழுத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது போல் திரையில் முழுமையாக கொண்டு வந்துவிட முடியுமா என்பது சிக்கலா சிக்கலான ஒரு விஷயம். அதேபோல பாய்மர கப்பலில் மின்னல் வெட்டியது என்று ஒரு காட்சியை மிக சுலபமாக எடுத்து போட்டுவிட்டார் கல்கி. ஆனால் அதை அப்படியே திரையில் காட்ட வேண்டுமானால் மேலைநாட்டு நிபுணர்களை வரவழைத்து தந்திரக் காட்சிகள், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம் அமைக்க வேண்டும்.(அப்ப வி.எஃப்.எக்ஸ் வசதிகள் இல்லை, இப்ப இந்தியாவிலேயே அதற்கான டெக்னாலஜி உள்ளது)

    கதாபாத்திரங்கள் குறித்தும் விவாதம்

    கதாபாத்திரங்கள் குறித்தும் விவாதம்

    அப்போதுதான் அந்த வரியை திரையில் காட்சி காட்டமுடியும். கம்ப்யூட்டர் யுகத்தில் உள்ள ரசிகர்களை கதை நடந்த அந்த சரித்திர காலத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காக தொல்பொருள் ஆய்வுத் துறையினருடன் விரிவாக பேசி விவாதித்தேன். சரித்திர காலத்துக்கு ஒவ்வாத மாதிரி நம்மை அறியாமலே தவறிப் போய் ஏதாவது அபத்தம் புகுந்து விடக்கூடும் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக படம் எடுக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினார்கள். மூன்றாவதாக கல்கி பொன்னியின் செல்வனில் படைத்துள்ள கதாபாத்திரங்கள் ஏராளமான பாத்திரங்கள் எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு விதத்தில் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து இருக்க விதத்தில் அமைத்து இருக்கிறார். எனவே என்ன பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று எதையுமே ஒதுக்கிட முடியாது சூழ்நிலை குறித்தும் விவாதித்தோம்.

    2 கோடி ரூபாய் பட்ஜெட் என முடிவெடுத்த கமல்

    2 கோடி ரூபாய் பட்ஜெட் என முடிவெடுத்த கமல்

    நான்காவதாக லொகேஷன் செயற்கையா செட்கள் அமைத்து படம் எடுப்பதில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை, எனவே பொன்னியின் செல்வன் கதை நடந்ததாக எழுதப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று அவசியம் எனில் அங்கங்கே செட்களை நிறுவி எடுப்பது தான் சிறப்பானதாக இருக்கும் என்று முடிவு செய்திருக்கிறோம். இதற்கெல்லாம் சுமார் 2 கோடி ரூபாய் செலவாகும் என்று நினைக்கிறேன். இது சரியாக திட்டமிட்டு செலவிடும்போதுதான் இல்லையெனில் இதுவே மூன்று மடங்கு அதிகரிக்கும் அபாயமும் இருக்கிறது. இதனால் தான் என்னவோ ராமாயணம், மகாபாரதம் போல டிவி தொடராக பொன்னியின் செல்வன் இருக்கக் கூடாதா என்றும் சிலர் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை பொன்னின் செல்வன் எனது சொந்த தயாரிப்பில் திரைப்படமாக எடுப்பதையே விரும்புகிறேன்.

    இசை இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் என திட்டமிட்ட கமல்

    இசை இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் என திட்டமிட்ட கமல்

    கடைசியாக நடிகை, நடிகர்கள் கதையில் வரும் ஒவ்வொரு பெண் பாத்திரத்தையும் அத்தனை அழகாக படைத்திருக்கிறார் கல்கி, அவற்றுக்கு பிரபலமான நடிகைகள் போட்டால் அவர்களுடைய இமேஜ் அந்தந்த பாத்திரங்களின் தன்மையை பின்னுக்கு தள்ளிவிடும் அபாயமும் இருக்கிறது. எனவே அழகான புதுமுகங்களைத்தான் தேட வேண்டும். சில விளம்பரங்களில் தென்படும் சில முகங்கள் பளிச்சென்று பொன்னியின் செல்வனின் சில பாத்திரங்களில் பொருத்தமாய் இருப்பதாகப்படுகிறது. அவர்களை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறேன். பலரும் எனது இந்த முயற்சிக்கு மிகுந்த உற்சாகமூட்டுகிறார்கள். சத்யராஜ், பிரபு போட்டுவிடலாம், நான் சொல்கிற பாத்திரத்தில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். இளையராஜாவும் பொன்னியின் செல்வனுக்காக பிரத்தியேக முயற்சி எடுத்துக் கொண்டு இசையமைத்து கொடுப்பார். நான் சொன்னால் போதும் எந்த வேலையையும் நிறுத்தி வைத்துவிட்டு பொன்னியின் செல்வனை படம் பிடிக்க வந்து விடுவார் கேமராமேன் ஸ்ரீராம்.

    சரியான இயக்குநர் மணிரத்னம் தான் அன்றே கணித்த கமல்

    சரியான இயக்குநர் மணிரத்னம் தான் அன்றே கணித்த கமல்

    இப்படத்தை இயக்குவதற்கான சரியான டைரக்டர் மணிரத்தினம் தான் என்பது எனது கணிப்பு. வந்திய தேவனாக யார் நடிப்பது என்பதை சொல்லத் தேவையில்லை. நீங்களே நேரம் புரிந்து இருப்பீர்கள். எல்லாம் சரி படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் கேட்கிறீர்களா ஐந்து பாகங்களை ஒருங்கிணைத்து சுருக்கி திரைக்கதை ஆக்கும் பணி தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. திரைக்கதை வசனம் தயாரானதும் பொன்னியின் செல்வனின் தீவிரவாசகர்கள் சிலரிடம் கொடுத்து படிக்கச் சொல்லி ஸ்கிரிப்ட் முழுமையானதாக, திருப்திகரமானதாக இருக்கிறதா என்று கருத்து கேட்டு அறிய விரும்புகிறேன். தேவையானால் அவர்கள் கருத்துப்படி சில மாறுதல்களை செய்வேன். அதன் பிறகு தான் படப்பிடிப்பு துவங்கும். இப்படி ஒவ்வொரு வாசகரின் கவரும் படியாக கல்வி பொன்னியின் செல்வன் எழுதினாரோ அப்படி பார்க்கும் ஒவ்வொருவரும் பாராட்டும்படியாக அதை படம் பார்க்கும்போதும் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை, லட்சியம், கனவு எல்லாமே" என்று கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.

    English summary
    30 years ago, Kamal gave an interview about the film Ponniin Selvan, which was made by Kamal Mani Ratnam, Ilayaraja and PC Sriram. Now it is going viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X