twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலம் கடந்தும் பேசும் கரகாட்டக்காரன்..ரிலீஸ் ஆகி 31 வருஷம் ஆச்சு !

    |

    சென்னை : தமிழ் திரைப்படங்களில் பல காமெடிகளும் காமெடி படங்களும் வருவதும் போவதுமுண்டு ஆனால் இந்த இந்தப்படமும் இதில் வரும் காமெடி காட்சிகளும் என்றும் எவர் கீரனாக எப்போதும் இருந்து வருகிறது.

    கரகாட்டக்காரன் என்ற மாபெரும் வெற்றிப் படம் வெளியாகி இன்றுடன் 31 வருடங்கள் ஆகிறது.

    இதனை இந்த படத்தின் இயக்குனர் கங்கை அமரனின் மகனும் இயக்குனருமான வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

    கேஜிஎஃப் 2 பிரம்மாண்டமாக OTTல் வெளியாகிறதா? யாஷ் விளக்கம் !கேஜிஎஃப் 2 பிரம்மாண்டமாக OTTல் வெளியாகிறதா? யாஷ் விளக்கம் !

    பல சாதனைகள்

    பல சாதனைகள்

    தமிழ் மக்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒரு படம் என்றால் அதில் கரகாட்டகாரன் கண்டிப்பாக இருக்கும் 1989ஆண்டு ஜூன் 16ஆம் தேதி வெளியான இந்த படம் பல ஆண்டுகளாக திரையில் ஓடி மக்களை மகிழ்வித்து வந்தது மட்டுமில்லாமல் பல சாதனைகளையும் செய்து வந்தது.

    வெற்றிகரமாக ஓடியது

    வெற்றிகரமாக ஓடியது

    முற்றிலும் கரகாட்டக் கலைஞர்களை பற்றி எடுக்கப்பட்ட இந்த படம் காமெடி மற்றும் காதல் கலந்து மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தை இயக்குனர் கங்கைஅமரன் இயக்கியிருந்தார் மேலும் இந்த படத்தில் ராமராஜன், கனகா, செந்தில், கவுண்டமணி, கோவை சரளா, சந்தானபாரதி மற்றும் சண்முகசுந்தரம் என அனைவரது அற்புதமான நடிப்பில் வெளியான இந்த படம் பல வருடங்கள் தாண்டி வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருந்தது. இந்த படத்தில் வரும் காமெடிகளும் பாடல்களும் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

    வாழைப்பழக்காமெடி

    வாழைப்பழக்காமெடி

    இந்த படத்தில் செந்தில் மற்றும் கவுண்டமணி இணைந்து செய்யும் காமெடி கலாட்டாக்கள் பார்ப்போரின் கண்களை இன்றும் சிரிக்க வைத்து கண்களை நனைய செய்யும், குறிப்பாக இவர்கள் இருவரும் சண்டையிடும் வாழைப்பழக் காமெடி மிகவும் பிரபலமானது. கிராமத்து வாசனையுடன் எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.

    நடனம் ஆடத்தெரியாது

    நடனம் ஆடத்தெரியாது

    பொதுவாக கரகாட்டக்கார நிபுணர் என்றால் கண்டிப்பாக அவருக்கு நடனம் தெரிந்திருக்க வேண்டும் ஆனால் ராமராஜனுக்கு அவ்வளவு அற்புதமாக நடனம் ஆடத் தெரியாது இருப்பினும் இந்த படத்தில் அவரது அற்புதமான நடிப்பின் மூலம் இது எல்லாம் மிகப்பெரிய ஒரு விஷயமாக எடுத்து கொள்ளாமல் மக்கள் அனைவரும் ரசித்து வந்தனர்.

    மக்கள் கொண்டாடினர்

    மக்கள் கொண்டாடினர்

    மேலும் இந்தப் படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தின் சாயலில் இருப்பதாக பலர் பேசி வந்த நிலையில் மக்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாது இந்த படத்தை பார்த்து ரசித்து கொண்டாடி வந்தனர். நீண்ட நாட்கள் திரையில் ஓடிய திரைப்படம் என்ற பெருமை பெற்றது இந்த படம்.

    ஹிட்டான பாடல்

    ஹிட்டான பாடல்

    இந்த படத்தில் நடிகர்களின் நடிப்பும் கதையும் இந்த படத்தின் வெற்றிக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக முக்கியமான ஒன்று இந்த படத்தின் பாடல்கள், இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்த படத்தில் மொத்தம் 9 பாடல்கள் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளியான அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து அனைத்து பாடல்களும் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. மேலும் இளையராஜா இதில் இசைத்த பாடல்கள் படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பலமாகவும் இருந்தது. இவ்வாறு அனைவராலும் என்றென்றும் ரசிக்க கூடிய இந்த படம் வெளியாகி இன்றுடன் 31 வருடங்கள் ஆகிறது. கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் படத்தின் 31வது வருட நாளை நினைவு கூர்ந்து தற்போது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கங்கை அமரனின் மகனும் இயக்குனருமான வெங்கட் பிரபு.

    English summary
    Celebrating 31 years of Karakattakaran
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X