ஹேப்பி நியூ இயர்.... ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்
சென்னை : 2021 ம் ஆண்டு முடிந்து 2022 ம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
ரசிகர்களும் தங்களின் ஃபேரைட் நடிகர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அப்படி இன்ஸ்டாகிராமில் வாழ்த்துக்களை பகிர்ந்த பிரபலங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

கமலஹாசன்
நம்பிக்கைகளைக் கொணர்வதே மாற்றம். ஓர் ஆண்டு மாறி புது ஆண்டு வருகிறதெனில், அது நம்முள் புதுப்புது நம்பிக்கைகளைப் பதியனிடுகிறது. இந்தப் புத்தாண்டில் உங்கள் அனைவரின் நம்பிக்கைகளும் செயலாக்கம் பெறட்டும். புத்தாண்டு வாழ்த்துகள் என கமல் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன்
வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாடி உள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், அதனை வீடியோவாக வெளியிட்டு, தங்களின் வாழ்த்தை பகிர்ந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன்
இந்த வரும் நிச்சயம் அனைவருக்கும் நல்ல படியாக அமையும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஜெயராம்
நடிகர் ஜெயராம் தனது மனைவியுடன் ஓட்டல் ஒன்றில் புத்தாண்டு கொண்டாடிய வீடியோவை வெளியிட்டு, அதில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபு
தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் இருக்கும் குடும்ப ஃபோட்டோவை வெளியிட்டு, ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தை பதிவிட்டுள்ளார் தெலுங்கு சூப்பர் ஹீரோ மகேஷ் பாபு.

நதியா
2022 ம் ஆண்டு அனைவருக்கும் பாதுகாப்பானதாகவும், பிரகாசமானதாகவும் இருக்கும் என நம்புவோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என நடிகை நதியா குறிப்பிட்டுள்ளார்.

நஸ்ரியா – ஃபகத் ஃபாசில்
நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட வான வேடிக்கைகளை ரசித்த படி நிற்றும் வீடியோவை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர் நடிகை நஸ்ரியா மற்றும் நடிகர் ஃபகத் ஃபாசில் ஆகியோர்.

தனுஷ்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். GGod bless என வாழ்த்து பதிவிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.

வைரமுத்து
அறிவு வழிநடத்த...
துணிவு துணையிருக்க
உழைப்பு செயல்படுத்த
நேர்மை நிலைநிறுத்த
என்ன செய்துறும்
இன்னல் எம்மை ?
வா புதத்தாண்டே
வாழ்த்துகிறோம் உன்னை
மலர்கொண்டு வா
கனிதந்து போ
மன்பதை வாழ்க
மானுடம் வெல்க

வெங்கட் பிரபு
ஹேப்பி நியூ இயர். 2022 புத்தாண்டே தயவு செய்து எங்கள் அனைவருக்கும் நல்லதாக இரு என வாழ்த்து பதிவிட்டுள்ளார் டைரக்டரும் நடிகருமானவெங்கட் பிரபு.

குஷ்பு
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்குள் எங்கள் குடும்பத்தின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என குடும்ப ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார் நடிகை குஷ்பு.


Click it and Unblock the Notifications











