விஜய், அமலா பால் திருமணத்தில் விக்ரம், பாலா, ஜெயம் ராஜா, சரண்யா
சென்னை: சென்னையில் நடந்த இயக்குனர் விஜய், நடிகை அமலா பாலின் திருமணத்திற்கு திரை உலக பிரபலங்கள் பலர் வந்திருந்தனர்.
இயக்குனர் விஜய், நடிகை அமலா பாலின் காதலை அவர்களின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து கடந்த 7ம் தேதி கொச்சியில் கிறிஸ்தவ முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அமலா கிறிஸ்தவர் என்பதால் தேவாலயத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்து முறை
விஜய் இந்து என்பதால் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் நடைபெற்றது.

திருமதி விஜய்
அமலா பால் விஜ்யயை திருமணம் முடித்த பிறகு நெற்றியில் குங்குமம் திருநீறு வைத்திருந்தார்.

விக்ரம்
விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகள் படத்தில் நடித்த விக்ரம் திருமணத்திற்கு வந்திருந்தார்.

ஜெயம் ராஜா
சக இயக்குனரான விஜய்யின் திருமணத்திற்கு வந்து மணமக்களை ஜெயம் ராஜா வாழ்த்தினார்.

மூக்குத்தி
திருமணத்திற்கு வந்திருந்தவர்களுடன் அமலா மூக்கில் கையை வைத்து பேச அதை பார்த்தால் என் மூக்குத்தி எப்பூடி என்று கேட்பது போல் உள்ளது.

பாலா
இயக்குனர் பாலா தனது மனைவி மற்றும் மகளுடன் திருமண விழாவில் கலந்து கொண்டார்.

அப்பாஸ்
நடிகர் அப்பாஸ் திருமணத்திற்கு வந்து மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்தினார்.

உதயா
விஜய்யின் அண்ணனும், நடிகருமான உதயா புதுமணத் தம்பதிகளுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

பேபி சாரா
தெய்வத் திருமகள் புகழ் பேபி சாரா தனது பெற்றோர், தம்பியுடன் விஜய், அமலா பால் திருமணத்திற்கு வந்திருந்தார்.

காமெடியன்கள்
விஜய் இயக்கிய படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர்களுடன் புதுமணத் தம்பதி.

சமுத்திரகனி
இயக்குனர் சமுத்திரக்கனி, நகைச்சுவை நடிகர் மனோபாலா ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.

சரண்யா
நடிகை சரண்யா தனது கணவர் மற்றும் மகள்களுடன் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்.

ரம்யா
அண்மையில் திருமணமான தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ரம்யா தோழி அமலா பாலுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











