அழகு குட்டி செல்ல மகளின் பிறந்தநாளை கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்: வைரல் புகைப்படங்கள்
Recommended Video

மும்பை: ஐஸ்வர்யா ராய் தனது செல்ல மகள் ஆராத்யாவின் 6வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவுக்கு கடந்த 16ம் தேதி 6வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. முந்தைய ஆண்டுகள் ஆராத்யாவின் பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடினர்.
இந்த ஆண்டு ஆராத்யாவின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளனர்.

பிறந்தநாள்
ஆராத்யாவின் பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுக்கப்பட்டது. பிரபலங்கள் தங்களின் குழந்தைகளுடன் வந்து ஆராத்யாவை வாழ்த்தினர்.

ஆப்ராம் கான்
நடிகர் ஷாருக்கான் தனது இளைய மகன் ஆப்ராமுடன் வந்து ஆராத்யாவின் பார்ட்டியில் கலந்து கொண்டார். குழந்தைகளை பார்த்ததும் ஆப்ராம் குஷியாகிவிட்டார்.

கேக்
ஐஸ்வர்யா தனது மகளை மாமியார் ஜெயா பச்சன் அருகில் செல்லவிடாமல் பார்த்துக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பார்ட்டியில் ஆராத்யா ஜெயா பச்சன் பாட்டிக்கு கேக் ஊட்டிவிட்டுள்ளார்.

மகன்
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது மகன் வியான் மற்றும் தாயுடன் வந்து ஆராத்யாவை வாழ்த்தினார். பல திரையுலக பிரபலங்கள் பார்ட்டிக்கு வந்திருந்தனர்.

மகிழ்ச்சி
தனது பிறந்தநாள் அன்று அம்மா கொடுத்த பார்ட்டியை பார்த்து ஆராத்யா மகிழ்ச்சி அடைந்துள்ளார். தாயும், மகளும் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











