Don't Miss!
- News
துரோகம், பதவி வெறி, சுயநலம்.. எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. டிடிவி தினகரன்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
சுஜா வருணி திருமண வரவேற்பு: கார்த்தி வந்தாக, ப்ரோ கணேஷ் வந்தாக, இன்னும்...
Recommended Video

சென்னை: சுஜா வருணி, சிவகுமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிக் பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நடிகை சுஜா வருணி, சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரின் திருமணம் சென்னையில் உள்ள கிரவுன் பிளாசாவில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிவகுமார்
சுஜா வருணி, சிவகுமாரின் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை லதா கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார். 11 ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் நேற்று கணவன், மனைவி ஆகியுள்ளனர்.

ஷாரிக்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான ஷாரிக் தனது அம்மா உமா ரியாஸுடன் வந்திருந்தார்.

விஜி
நடிகை விஜி சந்திரசேகர் தனது மகளுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

ரம்யா
பிக் பாஸ் பிரபலம் பாடகி ரம்யா சுஜா வருணிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்ரீப்ரியா
நடிகை ப்ரியா தனது கணவர் ராஜ்குமாருடன் வந்து பொறுப்பாக திருமணத்தை நடத்திக் கொடுத்தார். வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ஜனனி
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி சுஜா வருணியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சந்தியா
காதல் படம் மூலம் பிரபலமான நடிகை சந்தியா தனது கணவர், மகளுடன் சுஜா வருணி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டார்.

பிந்து மாதவி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்ட ஆரவ், பிந்து மாதவி தங்கள் தோழியை வாழ்த்த வந்திருந்தனர்.

டேனி
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி புகழ் டேனி சுஜா வருணியின் திருமண வரவேற்புக்கு வந்திருந்தார்.

வாழ்த்து
நடிகர் பிரசன்னா சுஜா வருணி, சிவகுமாரை நேரில் வந்து வாழ்த்தினார்.

வையாபுரி
அண்ணன் வையாபுரி தனது குடும்பத்துடன் வந்து தங்கச்சியை வாழ்த்தினார்.

கணேஷ் வெங்கட்ராம்
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நன்கு பழக்கமான ப்ரோ கணேஷ் வெங்கட்ராம் தனது மனைவியுடன் வந்திருந்தார்.

ரகுமான்
நடிகர் ரகுமான் தனது மனைவியுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

கார்த்தி
நடிகர் கார்த்தி தனது தந்தை சிவகுமாருடன் வந்து சுஜா, சிவகுமாரை வாழ்த்தினார்.