ஹேப்பி பர்த்டே மை டியர் குஞ்சுமணி: த்ரிஷாவுக்கு ஆர்யா வாழ்த்து
சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் த்ரிஷாவுக்கு நண்பர் ஆர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவர் இன்னும் கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். படப்பிடிப்புகளில் பிசியாக இருந்த அவர் ஓய்வு எடுக்க அமெரிக்கா சென்றுள்ளார்.
கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆர்யா
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை டியர் குஞ்சுமணி ஸ்வீட்ஹார்ட்..இந்த ஆண்டு அருமையானதாக அமையட்டும்.. நீ தான் பெஸ்ட் டார்லிங்.. கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று ஆர்யா வாழ்த்தியுள்ளார்.
வெங்கட் பிரபு
பிறந்தநாள் வாழ்த்துக்கள் த்ரிஷா. கடவுள் ஆசிர்வதிப்பாராக என இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார்.
அனிருத் ரவிச்சந்தர்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் த்ரிஷா. இந்த ஆண்டு சிறப்பானதாக அமையட்டும் என இசையமைப்பாளர் அனிருத் தனது தோழிக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
எங்கள் சென்னை பொண்ணுக்கு ஹேப்பி ஹேப்பி பர்த்டே என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











