»   »  'தீக்குச்சி' காட்சிக்கு கட்!

'தீக்குச்சி' காட்சிக்கு கட்!

Subscribe to Oneindia Tamil


டிஸ்கோ சாந்தியின் தம்பி ஜெயவர்மா நடித்துள்ள தீக்குச்சி படத்தில், வில்லனின் ஆட்கள் ஹீரோவின் தலையை மொட்டை அடித்து, அதில் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிக்கு சென்சார் போர்டு தடை விதித்து கட் செய்து விட்டது.

அந்தக் கால நடிகர் சி.எஸ்.ஆனந்தனின் மகள் டிஸ்கோ சாந்தி. அவரது தம்பி ஜெயவர்மா. இவர் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் தேறவில்லை.

இந்த நிலையில் முதல் முறையாக தனி ஹீரோவாக தீக்குச்சி என்ற படத்தில் நடித்துள்ளார் வர்மா. இலவசக் கல்வி குறித்து இப்படத்தின் கதையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த மைத்ரி என்பவர் ஜெயவர்மாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். காதல் தண்டபாணிதான் வில்லன். வடிவேலு நரிக்குறவர் வேடத்தில் கலக்கலாக நடித்துள்ளார்.

படத்தை முடித்து சென்சார் போர்டுக்கு சான்றிதழ் பெற அனுப்பி வைத்தனர். படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தைப் பாராட்டித் தள்ளி விட்டார்களாம்.

ஆனால் ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் அவர்கள் தடை போட்டு விட்டனராம்.

அதாவது வில்லனின் ஆட்கள், ஜெயவர்மாவைப் பிடித்து தலையை மொட்டை அடித்து கொடுமைப்படுத்துகிறார்கள். அப்போது வில்லனின் கூலியாள் ஒருவர், வர்மாவின் மொட்டைத் தலையில் மூச்சா போகிறது போல காட்சி வைத்திருந்தனர்.

இந்தக் காட்சி கொஞ்சம் அருவருப்பாக உள்ளதாக சென்சார்டு போர்டு உறுப்பினர்கள் கூறி அதை கட் செய்து விட்டனராம். மற்றபடி படத்தில் எங்குமே வெட்டு விழவில்லையாம். இதனால் தீக்குச்சி யூனிட் சந்தோஷமாக உள்ளது.

'டாய்லெட்டில் மூச்சா' போகலாம், தலையில் போலாமோ??

Read more about: discoshanti, jayavarma, theekutchi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil