வெட்டுப்படாத சிந்து, மேகா!

By Staff


ரஞ்சித், சிந்து துலானி, விவேக், மேகா நாயர் கலக்கல் நடிப்பில் உருவாகியுள்ள பசுபதி மே.பா. ராசக்காபாளையம் படத்தில் ஒரு காட்சியைக் கூட வெட்டாமல் சான்றிதழ் கொடுத்துள்ளார்களாம் தணிக்கைக் குழுவினர்.

Click here for more images

பசுபதி சின்ன இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக நடித்துள்ள படம் பசுபதி , மே.பா. ராசக்காபாளையம். அட்டகாசமான கேரக்டரில் அவர் நடித்துள்ளார். அவருக்கு ஜோடி கிளாமர் கிளி சிந்து துலானி.

தாய், மகன் பாசத்தை அடிப்படையாக்க கொண்ட படம் இது. இப்படத்தில் முக்கியமான கேரக்டரில் விவேக் அசத்தியுள்ளார். இந்த கேர்கடருக்கு விவேக்கைத்தான் போட வேண்டும் என ரஞ்சித் உள்பட அனைவருமே ஒருமனதாக தீர்மானித்து விவேக்கைப் போட்டுள்ளனர்.

படத்தில் மிகப் பெரிய அளவுக்கு காமெடி போர்ஷன் வந்துள்ளதாம். படம் முழுக்க காமெடியிலும், பல கருத்தான சிந்தனைகளையும் அள்ளி தெளித்துள்ளாராம் விவேக். காமெடி போர்ஷன் பெரிய அளவில் பேசப்படும் என்று இப்போதே பேச ஆரம்பித்துள்ளனர்.

படம் முடிந்து, தணிக்கைக்குப் போனது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் அடடா, என்ன ஒரு அருமையான படம் என்று அசந்து போய் ஒரு காட்சியைக் கூட வெட்ட முடியாது என்று கூறி விட்டார்களாம்.

இத்தனைக்கும் சிந்து துலானி படத்தில் இருந்தும் கூட அவரை ஆபாசம் இல்லாமல் பயன்படுத்தியிருப்பது தணிக்கைக் குழுவினரை கவர்ந்து விட்டதாம்.

இருந்தாலும் ரஞ்சித் மட்டும் ஒரு காட்சியை வெட்டலாமே என்று பரிந்துரைத்து, வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொண்டதால் அந்தக் காட்சியை மட்டும் கட் செய்து அனைவரும் பார்க்கத் தகுந்த படம் என்று பாராட்டி, யு சர்டிபிகேட் கொடுத்துள்ளனராம்.

சிந்து துலானியை வைத்து யு சர்டிபிகேட் வாங்கி ஒரு படம் வெளியாகிறது என்பது உண்மையிலேயே பாராட்டுக்குரிய விஷயம்தான்.

Read more about: ranjith
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X