சந்திரமுகி-800 முதல்வர் தலைமையில் விழா

By Staff

ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகியின் 800வது நாள் விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடக்கிறது.

தமிழ்த் திரையுலகில் இதுவரை தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம்தான் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்தது. அந்தப் படம் 770 நாட்கள் ஓடியது. அந்தக் காலத்தில் அது பெரும் சாதனை.

அச்சாதனையை தற்போது சந்திரமுகி முறியடித்துள்ளது. இப்படம் 800 நாட்களைத் தொட்டுள்ளது. இது தமிழில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் புதிய சாதனை ஆகும். இதையடுத்து சென்னையில் பிரமாண்ட விழா எடுக்க முடிவாகியுள்ளது. சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனமும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து இந்த விழாவை வருகிற 25ம் தேதி நடத்தவுள்ளன.

இந்த விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இதற்காக முதல்வரின் ஒப்புதலைப் பெற நடிகர் பிரபு,அவரது சகோதரர் ராம்குமார், இயக்குநர் பி.வாசு ஆகியோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.

விழாவுக்குத் தலைமை தாங்க முதல்வர் ஒப்புக் கொண்டுள்ளாராம். 25ம் தேதி நடைபெறும் விழாவில் ரஜினிகாந்த், உள்ளிட்ட கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X