»   »  சந்திரமுகி - 500 (நாட் அவுட்) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சந்திரகி 500 நாட்களைக் கடந்து தமிழ் திரையுலக வரலாற்றில் புதிய சாதனைபடைத்துள்ளது.சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், பி.வாசுவின் இயக்கததில் உருவான சந்திரமுகி வசூலை அள்ளிக் குவித்துஏற்கனவே சாதனை படைத்து. இந்த நிலையில் தற்போது புதிய சாதனை ஒன்றையும் சந்திரமுகி படைத்துள்ளது.தொடர்ந்து ஒரே தியேட்டரில் 500 நாட்கள் ஓடிய முதல் தமிழ்ப்படம் என்பதே சந்திரமுகியின் லேட்டஸ்ட்சாதனை. சென்னை சாந்தி தியேட்டரில் 500 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது சந்திரமுகி.சிவாஜி பிலிம்ஸுக்கும் சந்திரமுகி புதிய பெருமையை தேடித்தந்துள்ளது. சிவாஜி பிலிம்ஸுக்கு இது பொன்விழாஆண்டு. இந்த ஆண்டில் மிகப்பெரும் சாதனை படைத்த படத்தை தயாரித்த பெருமையை சந்திரமுகி சிவாஜிபிலிம்ஸுக்குக கொடுத்துள்ளது.மொத்தம் 57 தியேட்டர்களில் சந்திரகி 200 நாட்கள் ஓடியுள்ளது. 7 தியேட்டர்களில் 300 நாட்களைதொட்டுள்ளது. தற்போது சாந்தி தியேட்டரில் 500 நாட்களை தாண்டியுள்ளது.ரஜினியின் முந்தைய சூப்பர் ஹிட் படங்களான முத்து, படையப்பா ஆகியவை ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜப்பானில் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது. அதேபோல சந்திரமுகியும்தற்போது ஜப்பானிய மொழியில் மொழி மாற்றம் செய்யப்படடுள்ளது. விரைவில் அங்கு வெளியிடப்படள்ளது.இந்தியிலும் சந்திரமுகி ரீமேக் ஆகிறது. தமிழகத்ததில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். தியாகராஜபாகவதரின் ஹரிதாஸ் சென்னையில் ஒரு வருடத்திற்கு ஓடியதாம். அதன் பின்னர் 1982ம் ஆண்டுபயணங்கள்முடிவதில்லை, இளையராஜாவின் இசை மற்றும் படத்தின் கதை காரணமாக சென்னையில் ஒருவருடத்திற்கு ஓடியது.பின்னர் ராமராஜனின் கரகாட்டக்காரன் மதுரையில் ஒரு வருடம் ஓடியது. கரகாட்டக்காரனின் ஓட்டத்திற்கும்இசைஞானியின் இன்னிசைதான் முக்கிய காரணமாக இருந்தது. அத்தோடு கவுண்டமணி-செந்திலின் கலக்கல்காமெடியும் கூட சேர்ந்தது.கமல்ஹாசன் தெலுங்கில் நடித்து, கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான மரோசரித்ரா சென்னையில் பகல்காட்சியாகவே ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. ஆனால் இந்த சாதனைகளை எல்லாம் சந்திரமுகிமுறியடித்துள்ளது.

சந்திரமுகி - 500 (நாட் அவுட்) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சந்திரகி 500 நாட்களைக் கடந்து தமிழ் திரையுலக வரலாற்றில் புதிய சாதனைபடைத்துள்ளது.சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், பி.வாசுவின் இயக்கததில் உருவான சந்திரமுகி வசூலை அள்ளிக் குவித்துஏற்கனவே சாதனை படைத்து. இந்த நிலையில் தற்போது புதிய சாதனை ஒன்றையும் சந்திரமுகி படைத்துள்ளது.தொடர்ந்து ஒரே தியேட்டரில் 500 நாட்கள் ஓடிய முதல் தமிழ்ப்படம் என்பதே சந்திரமுகியின் லேட்டஸ்ட்சாதனை. சென்னை சாந்தி தியேட்டரில் 500 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது சந்திரமுகி.சிவாஜி பிலிம்ஸுக்கும் சந்திரமுகி புதிய பெருமையை தேடித்தந்துள்ளது. சிவாஜி பிலிம்ஸுக்கு இது பொன்விழாஆண்டு. இந்த ஆண்டில் மிகப்பெரும் சாதனை படைத்த படத்தை தயாரித்த பெருமையை சந்திரமுகி சிவாஜிபிலிம்ஸுக்குக கொடுத்துள்ளது.மொத்தம் 57 தியேட்டர்களில் சந்திரகி 200 நாட்கள் ஓடியுள்ளது. 7 தியேட்டர்களில் 300 நாட்களைதொட்டுள்ளது. தற்போது சாந்தி தியேட்டரில் 500 நாட்களை தாண்டியுள்ளது.ரஜினியின் முந்தைய சூப்பர் ஹிட் படங்களான முத்து, படையப்பா ஆகியவை ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜப்பானில் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது. அதேபோல சந்திரமுகியும்தற்போது ஜப்பானிய மொழியில் மொழி மாற்றம் செய்யப்படடுள்ளது. விரைவில் அங்கு வெளியிடப்படள்ளது.இந்தியிலும் சந்திரமுகி ரீமேக் ஆகிறது. தமிழகத்ததில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். தியாகராஜபாகவதரின் ஹரிதாஸ் சென்னையில் ஒரு வருடத்திற்கு ஓடியதாம். அதன் பின்னர் 1982ம் ஆண்டுபயணங்கள்முடிவதில்லை, இளையராஜாவின் இசை மற்றும் படத்தின் கதை காரணமாக சென்னையில் ஒருவருடத்திற்கு ஓடியது.பின்னர் ராமராஜனின் கரகாட்டக்காரன் மதுரையில் ஒரு வருடம் ஓடியது. கரகாட்டக்காரனின் ஓட்டத்திற்கும்இசைஞானியின் இன்னிசைதான் முக்கிய காரணமாக இருந்தது. அத்தோடு கவுண்டமணி-செந்திலின் கலக்கல்காமெடியும் கூட சேர்ந்தது.கமல்ஹாசன் தெலுங்கில் நடித்து, கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான மரோசரித்ரா சென்னையில் பகல்காட்சியாகவே ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. ஆனால் இந்த சாதனைகளை எல்லாம் சந்திரமுகிமுறியடித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சந்திரகி 500 நாட்களைக் கடந்து தமிழ் திரையுலக வரலாற்றில் புதிய சாதனைபடைத்துள்ளது.

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், பி.வாசுவின் இயக்கததில் உருவான சந்திரமுகி வசூலை அள்ளிக் குவித்துஏற்கனவே சாதனை படைத்து. இந்த நிலையில் தற்போது புதிய சாதனை ஒன்றையும் சந்திரமுகி படைத்துள்ளது.

தொடர்ந்து ஒரே தியேட்டரில் 500 நாட்கள் ஓடிய முதல் தமிழ்ப்படம் என்பதே சந்திரமுகியின் லேட்டஸ்ட்சாதனை. சென்னை சாந்தி தியேட்டரில் 500 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது சந்திரமுகி.

சிவாஜி பிலிம்ஸுக்கும் சந்திரமுகி புதிய பெருமையை தேடித்தந்துள்ளது. சிவாஜி பிலிம்ஸுக்கு இது பொன்விழாஆண்டு. இந்த ஆண்டில் மிகப்பெரும் சாதனை படைத்த படத்தை தயாரித்த பெருமையை சந்திரமுகி சிவாஜிபிலிம்ஸுக்குக கொடுத்துள்ளது.

மொத்தம் 57 தியேட்டர்களில் சந்திரகி 200 நாட்கள் ஓடியுள்ளது. 7 தியேட்டர்களில் 300 நாட்களைதொட்டுள்ளது. தற்போது சாந்தி தியேட்டரில் 500 நாட்களை தாண்டியுள்ளது.

ரஜினியின் முந்தைய சூப்பர் ஹிட் படங்களான முத்து, படையப்பா ஆகியவை ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜப்பானில் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது. அதேபோல சந்திரமுகியும்தற்போது ஜப்பானிய மொழியில் மொழி மாற்றம் செய்யப்படடுள்ளது. விரைவில் அங்கு வெளியிடப்படள்ளது.இந்தியிலும் சந்திரமுகி ரீமேக் ஆகிறது.

தமிழகத்ததில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். தியாகராஜபாகவதரின் ஹரிதாஸ் சென்னையில் ஒரு வருடத்திற்கு ஓடியதாம். அதன் பின்னர் 1982ம் ஆண்டுபயணங்கள்முடிவதில்லை, இளையராஜாவின் இசை மற்றும் படத்தின் கதை காரணமாக சென்னையில் ஒருவருடத்திற்கு ஓடியது.

பின்னர் ராமராஜனின் கரகாட்டக்காரன் மதுரையில் ஒரு வருடம் ஓடியது. கரகாட்டக்காரனின் ஓட்டத்திற்கும்இசைஞானியின் இன்னிசைதான் முக்கிய காரணமாக இருந்தது. அத்தோடு கவுண்டமணி-செந்திலின் கலக்கல்காமெடியும் கூட சேர்ந்தது.

கமல்ஹாசன் தெலுங்கில் நடித்து, கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான மரோசரித்ரா சென்னையில் பகல்காட்சியாகவே ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. ஆனால் இந்த சாதனைகளை எல்லாம் சந்திரமுகிமுறியடித்துள்ளது.


Read more about: chandramukhi hits new record

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil