twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சார்லி சாப்ளினுக்கு இன்று பர்த் டே! காமெடியில் வென்ற கலைஞனுக்கு கைகொடுக்காத காதலும் திருமணமும்!

    By
    |

    சென்னை: வாழ்க்கை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விஷயங்களைக் கொடுக்கிறது. அல்லது கற்றுக்கொடுக்கிறது.

    அதைப் பிடித்தபடி, உயரே ஏறியவர்கள் ஏராளம். உருண்டு விழுந்தவர்களும் தாராளம்.

    அப்படி திறமையாலும் உழைப்பாலும் உயரே ஏறியவர்களில் ஒருவர், காமெடி கிங் சார்லி சாப்ளின்!

    ஊரெல்லாம் கொரோனா வைரஸ் பீதி.. இந்த லாக்டவுன் நேரத்துல இதைத்தான் பண்ணுறாராமே, நம்ம விஜய் ஆண்டனி!ஊரெல்லாம் கொரோனா வைரஸ் பீதி.. இந்த லாக்டவுன் நேரத்துல இதைத்தான் பண்ணுறாராமே, நம்ம விஜய் ஆண்டனி!

    சிரித்துக்கொண்டு

    சிரித்துக்கொண்டு

    மொத்த பிரச்னைகளையும் முதுகில் சுமந்துகொண்டு, 'என் பிரச்னைகளை என் உதடுகள் அறிவதே இல்லை, அவை எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கின்றன' என்று சொன்னவர். விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பவர், அச்சகத் தொழிலாளி, மருத்துவப் பணியாளன் என அவர் பார்க்காத வேலையில்லை. ஆனால், நடிகனாக வேண்டும் என்கிற லட்சியத்தில் இருந்து அவர் தன் மனதை விலக்கியதே இல்லை.

    பர்த் டே

    பர்த் டே

    அதனால்தான் அவரால் உச்சம் தொட முடிந்தது. அதற்குப் பின்னால் இருந்த துயரங்களும் வலிகளும் ஆயிரம் என்றாலும் சாப்ளின் என்றால் நமக்குத் தெரியவது அவரது மீசையும் சிரிப்புமே! உலகம் முழுவதும் உள்ள ரசிகர்ளை, சகட்டுமேனியாக சிரிக்க வைத்த சார்லி சாப்ளினுக்கு இன்று 131 வது பர்த் டே!

    காதலும் திருமணமும்

    காதலும் திருமணமும்

    வாழ்வில் போராடி முன்னேறிய சாப்ளினுக்கு காமெடி கை கூடிய அளவுக்கு காதலும் திருமண வாழ்க்கையும் திருப்தியாக இல்லை. வறுமை அவரது காதலை உடைத்தெறிந்தது. எல்லோரையும் போல முதல் காதலை மூட்டையாக சுமந்துகொண்டே அலைந்தார். காதலி ஹட்டியின் நினைவுகள் அவரை துன்புறுத்தின. அவரது திருமண வாழ்க்கை கசந்ததற்கும் இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

    மில்ட்ரெட் ஹாரிஸ்

    மில்ட்ரெட் ஹாரிஸ்

    சாப்ளினின் முதல் மனைவி, நடிகை, மில்ட்ரெட் ஹாரிஸ். 1918 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அப்போது மில்ட்ரெட்டுக்கு வயது 16. இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்து போனது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, மில்ட்ரெட் தனக்கு நிகரானவர் இல்லை என்று நினைத்த சார்லி சாப்ளின், அவரை 1920 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

    சுயசரிதை

    சுயசரிதை

    அடுத்து, அவர் திருமணம் செய்துகொண்டது, நடிகை லிட்டா கேரியை. இந்த திருமணம் 1924 ஆம் ஆண்டு நடந்தது. சார்லி சாப்ளினின், த கோல்ட் ரஷ், த ஐடில் கிளாஸ், த கிட் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார், லிட்டா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். பிறகு கருத்து வேறுபாடு. 1927 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். சார்லி சாப்ளினுடனான திருமண வாழ்க்கை குறித்து சுயசரிதை ஒன்றை எழுதி இருக்கிறார், இவர்.

    த கிரேட் டிக்டேட்டர்

    த கிரேட் டிக்டேட்டர்

    அடுத்து சாப்ளின் திருமணம் செய்தது, பாலட் கோட்டார்ட். இவரும் நடிகைதான். இது பாலட்டுக்கு இரண்டாவது திருமணம். சாப்ளினுக்கு மூன்றாவது. சாப்ளினின் த கிரேட் டிக்டேட்டர் படத்தில் இவரை பார்த்திருக்கலாம். ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள பாலட்டுக்கும் சாப்ளினுக்கும் ஒத்துப் போகவில்லை. 1942 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார், சாப்ளினை.

    ஊனா ஓ நீல்

    ஊனா ஓ நீல்

    காதலும் திருமணங்களும் சாப்ளினை கவலையில் ஆழ்த்தினாலும் மீடியாக்களில் எதிர்மறை விமர்சனங்கள் குவிந்த போதும், தொடர்ந்து படங்களின் கவனம் செலுத்தி வந்தார் சாப்ளின். பின்னர் சாப்ளின், ஊனா ஓ நீல் என்ற நடிகை மீது காதல் வயப்பட்டார். 1943 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துகொண்டர்கள். அப்போது சாப்ளினுக்கு வயது 54, ஊனாவின் வயது 17. இது சர்ச்சையானது.

    நம்பிக்கை டானிக்

    நம்பிக்கை டானிக்

    இருந்தாலும் முந்தைய திருமணங்கள் பொட்டென சில வருடங்களிலேயே முறிந்துவிட, இந்த திருமணம் நீடித்தது. இவர்களுக்கு எட்டுக் குழந்தைகள். நடிகராக அறியப்பட்ட சாப்ளின், இயக்குநர், இசை அமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், எடிட்டார், தயாரிப்பாளர் என்று பல முகங்கள் கொண்டவர். இன்று அவர் இல்லை என்றாலும் 'கனவுகள் எல்லாம் நனவாகும் அதிகமான காயங்களுக்குப் பிறகு' என்று அவர் சொன்ன வார்த்தைகள் மட்டும் போராடும் இளைஞர்களுக்கு நம்பிக்கை டானிக்!

    English summary
    charlie chaplin birthday special story
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X