»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

கன்னடத்து சாருலதாவுக்கு தமிழில் இப்போது நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளதாம். தமிழில் ஜூனியர்- சீனியர் மூலம் நுழைந்துபார்த்தார். ஆனால், அப்போது அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் மீண்டும் கன்னடத்துக்கே ஓடினார். கன்னடத்தில் பல படங்களில் நடித்து முடித்தார்.

இப்போது மீண்டும் எஸ்.ஏ. சந்திரசேகரனின் முத்தம் படம் மூலம் தமிழிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். கன்னடத்தில் கற்றுக்கொண்ட கலைகளை இங்கு அமல்படுத்தி கைவசம் 4 படங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

வசீகரிக்கும் முகம் இல்லாவிட்டாலும் கூட தயாரிப்பாளர்களை, இயக்குனர்களை மடக்குவது எப்படி என்பதை எப்படியோ இந்தமுறை புரிந்து கொண்டுவிட்டார். தன் திறமையால் பல தயாரிப்பாளர்களை வளைத்து விட்டார். இதனால்தான் முதல் படம் வெளிவருவதற்குள் 4 படங்களில் புக் ஆகி விட்டார்.

கன்னடத்தில் கண்டபடி நடித்திருந்தாலும் கூட தமிழில் கவர்ச்சி அதிகம் காட்ட மாட்டேன்,ஒரளவுக்குத்தான் காட்டுவேன் என்று கோட்டா கணக்கெல்லாம் கூறுகிறாராம் அம்மணி.

அருண்குமார்- சாருலதா நடித்த இந்தப் படத்துக்கு முதலில் முத்தமிடலாமா என்று தலைப்பிட்டிருந்தார்கள். ஆனால், சென்சாரில்பெயருக்கு வெட்டு விழுந்ததால் முத்தம் என்று மாற்றியிருக்கிறார்கள்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil