»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

த்ரிஷாவைப் போன்ற ஒருவர் குளிக்கும் காட்சியை இன்டர்நெட், எம்எம்எஸ்சில் வெளியிட்டவர்களை சும்மா விடக் கூடாது என்றுசீறுகிறார் மன்மதா ராணி சாயா சிங்.

ஹோட்டல் பாத்ரூமில் த்ரிஷா மாதிரி ஒரு பெண் குளிப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் இன்டர்நெட்டில் வெளியாகி கலக்கியது.

இந்த மேட்டருக்கு த்ரிஷாவே ஒரு வழியாய் முற்றுப் புள்ளி வைத்துவிட்ட நிலையில், இந்த விஷயத்தில் ரொம்பவே டென்சனாகிறார் சாயாசிங்.

அவர் கூறுகையில்,

இது போன்ற காட்சிகளை வெளியிட்டவர்களின் வீடுகளிலும் அக்காள், தங்கைகள் இருப்பார்கள். அவர்களை இந்தக் கயவர்கள் மறந்துவிட்டார்களா? அவர்கள் பாட்டுக்கு இன்டர்நெட்டில் வெளியிட்டு விட்டார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட பெண்களின் மனம் படும் பாடுஇவர்களுக்குப் புரியுமா?

இது சுத்த அயோக்கியத்தனம். ஏதோ ஒரு பெண் நிர்வாணமாய் குளிக்கிறதைப் போட்டு விட்டு இது நடிகைன்னு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இது மாதியான குற்றங்களை சும்மா விடக் கூடாது.

கம்ப்யூட்டர் மூலம் முகத்தை மாற்றி மார்ஃபிங் செய்து த்ரிஷா என்று சொல்லி ஏமாற்றியுள்ளனர். இந்த இழிவான காரியத்தைசெய்தவர்களை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று குமுறித் தீர்த்துவிட்டார் சாயா.

சாயாவின் கோபத்துக்கு என்ன காரணமோ?!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil