ஸ்பெஷல்ஸ்
மன்மத ராசா... புகழ் சாயா சிங் ரொம்ப யோசித்து ஒரே ஒரு படத்துக்கு மட்டும் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார்.
திருடா திருடி படம் ஹிட் ஆனதற்கு, மன்மத ராசா பாட்டும், அதில் மின்னலாட்டம் போட்ட சாயாசிங்கும் முக்கியகாரணம். படம் வெற்றியடைந்ததால் சாயாசிங்கைத் தேடி பல பட வாய்ப்புகள் வந்துள்ளன.
ஆனால், ஒரே ஒரு படத்தைத் தவிர வேறு எதையும் அவர் ஏற்க மறுத்து விட்டார். படித்துக் கொண்டிருப்பது ஒருகாரணமாக இருந்தாலும், வந்த வாய்ப்புகள் எல்லாம், மன்மத ராசா பாட்டு லெவலுக்கு இருக்கிறதாம். மேலும்அதீத கவர்ச்சி காட்டவும் சொல்கிறார்களாம்.
இந்த வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டால், விந்தியா மாதிரி அடுத்து ஒரு பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆட தன்னைஅழைக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று பயந்து போன சாயா, வரும் தயாரிப்பாளர்களை எல்லாம் போயா,போயா என்று விரட்டிக் கொண்டிருக்கிறார்.
அவர் ஏற்றுக் கொண்டுள்ள ஒரே படம் துள்ளல். இரட்டைக் கதாநாயகிகள் கொண்ட இந்தப் படத்தை இயக்குவதுஜோடி, ஸ்டார் ஆகிய படங்களை டைரக்ட் செய்த பிரவீன்காந்த்.
இதில் சாயாவுக்கு கவர்ச்சியுடன் கூடிய மிக நல்ல கேரக்டராம். இன்னொரு ஹீரோயினாக நந்தனா நடிக்கிறார்.இவர் சிவாஜியின் பேரன் துஷ்யந்தனுடன் சக்ஸஸ் என்ற படுதோல்விப் படத்தில் நடித்தவர்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எந்த சூழ்நிலையிலும் ஒரு துள்ளல் இருந்து கொண்டே இருக்கும். அதைபாஸிட்டிவாகத் திருப்பினால் சூழ்நிலை சிக்கல்களில் இருந்து தப்பலாம், நினைத்தனை சாதிக்கலாம் என்றவித்தியாசமான கரு தான் கதையாம்.
கதையும் அதில் தனது கேரக்டரும் சிறப்பாக இருப்பதால் இந்தப் படத்துக்கு மட்டும் கை நீட்டி அட்வான்ஸ்வாங்கியுள்ளார் சாயா.
பாண்டிச்சேரி, ஊட்டி, ராஜஸ்தான் என பல இடங்களில் இந்த வாரமே சூட்டிங் தொடங்குகிறது. ஒரு பாட்டுக்குசுஷ்மிதா சென் டான்ஸ் ஆடப் போகிறார்.


Click it and Unblock the Notifications











