»   »  ரேணிகுண்டா ரெட்டி!

ரேணிகுண்டா ரெட்டி!

Subscribe to Oneindia Tamil

விவேக் ரொம்ப நாளாக ஹீரேவாக நடித்துக் கொண்டிருக்கும் சொல்லி அடிப்பேன்படத்தின் ஒரே ஒரு பாடல் காட்சியை மட்டும் 3டியில் சுட்டு வருகிறார்களாம்.

சாயா சிங், தேஜாஸ்ரீ என இரண்டு குஜிலிகளுடன் ஜோடி போட்டு ஹீரோவாக விவேக்நடித்து வரும் படம் சொல்லி அடிப்பேன்.

ஏன் இத்தனை தாமதம் என்று யாருக்கும் தெரியவில்லை. விவேக்கிடம் கேட்டால்,நான் பொறந்தப்ப நடிக்க ஆரம்பிச்ச படம்.. இன்னும் நடிச்சுக்கிட்டே இருக்கேன்என்கிறார் படு கிண்டலாக.

எப்போதாவது காட்சிகளை சுட்டு வருவதால் படம் படு நிதானமாக வளர்ந்துவருகிறது இந்தப் படம். இதில் ஒரு பாடல் காட்சியை மட்டும் வித்தியாசமாக புடிக்கஇயக்குனர் யோசித்துள்ளார்.


அதையும் பல மாதங்கள் யோசித்து கடைசியாக, 3டியில் எடுத்தால் எப்படி இருக்கும்என்று விவேக்கிடம் கேட்டுள்ளார். ரொம்ப நல்லா இருக்கும்.. ஆனால் அதையாவதுசீக்கிரமா எடுங்க என்றாராம்.

இதற்கு தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த்தும் பச்சைக் கொடி காட்டி விட்டார்.

அப்புறம் என்ன, வாடி வாடி வள்ளிக் கிழங்கே கோயம்பேடு முள்ளுக் கிழங்கே என்றஅந்தப் பாடலை 3டியில் சுட்டு முடித்து விட்டார்கள். இப்பாடலில் சாயா சிங்குடன்சேர்ந்து படு சேட்டையாக ஆடிக் கொடுத்துள்ளாராம் விவேக்.


டான்ஸ் மூவ்மென்ட்ஸ்களில் விவேக் திணற, சாயாசிங்தான் காலை எப்படி ஆட்டவேண்டும், தூக்க வேண்டும், நீட்ட வேண்டும் என்று விலாவாரியாக கத்துக்கொடுத்தாராம்.

விவேக்கும் ஒன்றிப் போய் சாயா மேல் விழாத குறையாக நெருக்கமாக ஆடி,அலப்பறையைக் கொடுத்துள்ளார்.

படத்தில் இந்தப் படாலைப் பார்க்க மட்டும் 3 டி கிளாஸ் போட வேண்டி இருக்கும்போல.

அது கிடக்கட்டும்...


நமிதா நடிக்கும் நீ வேணும்டா செல்லம் படத்தில் விவேக் படு கலக்கலான ரோலில்நடித்துள்ளாராம். அதில் அவருக்குப் பெயர் ரேணிகுண்டா ரெட்டி.

அந்த கேரக்டரில் என்.டி.ஆர், அவரது மகன்கள் ஆகியோரின் ஸ்டைல்களைஅப்படியே காப்பியடித்து கலக்கியுள்ளாராம். ஆந்திர பாணியில் வேட்டியைக் கட்டிக்கொண்டு, மேலே பல வண்ண சட்டையுடன் ஒவ்வொரு காட்சியிலும் வருகிறாராம்.

நான் வரும் அத்தனை காட்சிகளிலும் ரசிகர்கள் குலுங்கி குலுங்கிச் சிரித்து வயிறு வலிவந்து ஆஸ்பத்திரிக்குப் போகப் போகிறார்கள் பாருங்க என்று ரொம்ப நம்பிக்கையாககூறி வருகிறார் விவேக்.

காதுல ரத்தம் வராம இருந்தா சரி!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil