»   »  ஆள் அனுப்பும் சாயா! சாயா சிங் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட தீவிரமாக இருக்கிறார்.வாய்ப்பு பிடிப்பதற்காக சம்பளத்திற்கு ஒரு ஆளைப்போட்டு கோலிவுட்டில் அவரைசுற்ற விட்டுள்ளார்.திருடா திருடிக்குப் பிறகு சுத்தமாக ஆளே காணாமல் போய் விட்டார் சாயா சிங்.மன்மத ராசா பாட்டுக்கு அவர் போட்ட குத்தாட்டத்தைத் தொடர்ந்து நல்ல பேர்கிடைத்தது. ஆனால் ஏகப்பட் பந்தா காட்டியதால் சாயா சிங்கை அண்ட ஒரு ஆளும் இல்லாமல்போய் விட்டது. இதனால் நொந்து நூலான சாயா சிங் ஒத்தப் பாட்டுக்காச்சும்கூப்பிடுங்கப்பா என்று கோலிவிட்டில் நூல் விட்டுப் பார்த்தார்.விஜய் படத்தில் ஒரு பாட்டுக்குக் குத்த கூப்பிட்டனுப்பினார்கள். அத்தோடு சரி,குத்தாட்டத்திற்கும் வாய்ப்பு வரவில்லை.விவேக்குடன் 2வது நாயகியாக சொல்லி அடிப்பேன் படத்தில் நடித்து வரும்சாயாவுக்கு அதை விட்டால் வேறு படம் கையில் இல்லை.ஆனால் சொல்லி அடிப்பேன் படம் இன்னும் முடிந்த பாடில்லை. இப்போது தான்அடுத்த கட்ட ஷூட்டிங்கை (இன்னுமா?) ஆரம்பித்துள்ளார்களாம். விரைவில்(எப்படியாச்சும்!) வெளியாகி விடுமாம். இந்தப் படத்தை நம்பிக் கொண்டிருந்தால் கதை கந்தல் தான் என்பதால் தெலுங்கில்முயற்சித்துப் பார்த்தார் சாயா சிங். முடியவில்லை.எங்க வேகத்துக்கு நீங்க சரிப்பட மாட்டீங்க என்று மணவாடுகள் தெள்ளத் தெளிவாகசொல்லி அனுப்பி விட்டார்கள்.வெறுத்துப் போன சாயாவுக்கு தாயகமான கன்னடம் கொஞ்சம் கை கொடுத்தது.இருந்தாலும் 10 கன்னடப் படத்தில் நடிப்பது, ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்கு சமம்என்ற அளவுக்கு தமிழ்ப் படங்களுக்கு படு கிரேஸ் இருப்பதால் (கன்னடத்தில்சம்பளம் அப்படி) மீண்டும் தமிழில் காலூன்ற முடிவு செய்து தீவிர முயற்சிகளில்இறங்கியுள்ளார் சாயா சிங்.இதற்காகவே கோலிவுட் சமாச்சாரங்கள் நன்கு தெரிந்த ஒரு மீடியேட்டரைப் பிடித்துசம்பளத்திற்குப் போட்டுள்ளார். அந்த அங்கிள், சாயாவின் லேட்டஸ்ட் ஆல்பத்துடன் கோலிவுட்டை வலம் வந்துவாய்ப்பு கேட்டு வருகிறார்.கோலிவுட்டில் மட்டும் சுற்றிக் கொண்டிருக்காமல் அப்படியே மலையாளம்,தெலுங்குப் பக்கம் போய் வர வேண்டும் என்று சாயா உத்தரவிட்டுள்ளாராம்.இதனால் சென்னைக்கும், கொச்சினுக்கும், ஹைதராபாத்துக்குமாக அந்த பார்ட்டிஅலைந்து திரிந்து கொண்டிருக்கிறதாம்.எப்படி அலைந்தும் இன்னும் ஒரு வாய்ப்பும் குதிராததால் சோர்ந்து போயுள்ளாராம்சாயா.கிளாமர் காட்டுவதில் தனது கொள்கையை மிக நன்றாகவே தளர்த்தியுள்ளாராம் சாயா.இதையும் அந்த மீடியேட்டர் தான் கோலிவுட்டில் பரவ விட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆள் அனுப்பும் சாயா! சாயா சிங் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட தீவிரமாக இருக்கிறார்.வாய்ப்பு பிடிப்பதற்காக சம்பளத்திற்கு ஒரு ஆளைப்போட்டு கோலிவுட்டில் அவரைசுற்ற விட்டுள்ளார்.திருடா திருடிக்குப் பிறகு சுத்தமாக ஆளே காணாமல் போய் விட்டார் சாயா சிங்.மன்மத ராசா பாட்டுக்கு அவர் போட்ட குத்தாட்டத்தைத் தொடர்ந்து நல்ல பேர்கிடைத்தது. ஆனால் ஏகப்பட் பந்தா காட்டியதால் சாயா சிங்கை அண்ட ஒரு ஆளும் இல்லாமல்போய் விட்டது. இதனால் நொந்து நூலான சாயா சிங் ஒத்தப் பாட்டுக்காச்சும்கூப்பிடுங்கப்பா என்று கோலிவிட்டில் நூல் விட்டுப் பார்த்தார்.விஜய் படத்தில் ஒரு பாட்டுக்குக் குத்த கூப்பிட்டனுப்பினார்கள். அத்தோடு சரி,குத்தாட்டத்திற்கும் வாய்ப்பு வரவில்லை.விவேக்குடன் 2வது நாயகியாக சொல்லி அடிப்பேன் படத்தில் நடித்து வரும்சாயாவுக்கு அதை விட்டால் வேறு படம் கையில் இல்லை.ஆனால் சொல்லி அடிப்பேன் படம் இன்னும் முடிந்த பாடில்லை. இப்போது தான்அடுத்த கட்ட ஷூட்டிங்கை (இன்னுமா?) ஆரம்பித்துள்ளார்களாம். விரைவில்(எப்படியாச்சும்!) வெளியாகி விடுமாம். இந்தப் படத்தை நம்பிக் கொண்டிருந்தால் கதை கந்தல் தான் என்பதால் தெலுங்கில்முயற்சித்துப் பார்த்தார் சாயா சிங். முடியவில்லை.எங்க வேகத்துக்கு நீங்க சரிப்பட மாட்டீங்க என்று மணவாடுகள் தெள்ளத் தெளிவாகசொல்லி அனுப்பி விட்டார்கள்.வெறுத்துப் போன சாயாவுக்கு தாயகமான கன்னடம் கொஞ்சம் கை கொடுத்தது.இருந்தாலும் 10 கன்னடப் படத்தில் நடிப்பது, ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்கு சமம்என்ற அளவுக்கு தமிழ்ப் படங்களுக்கு படு கிரேஸ் இருப்பதால் (கன்னடத்தில்சம்பளம் அப்படி) மீண்டும் தமிழில் காலூன்ற முடிவு செய்து தீவிர முயற்சிகளில்இறங்கியுள்ளார் சாயா சிங்.இதற்காகவே கோலிவுட் சமாச்சாரங்கள் நன்கு தெரிந்த ஒரு மீடியேட்டரைப் பிடித்துசம்பளத்திற்குப் போட்டுள்ளார். அந்த அங்கிள், சாயாவின் லேட்டஸ்ட் ஆல்பத்துடன் கோலிவுட்டை வலம் வந்துவாய்ப்பு கேட்டு வருகிறார்.கோலிவுட்டில் மட்டும் சுற்றிக் கொண்டிருக்காமல் அப்படியே மலையாளம்,தெலுங்குப் பக்கம் போய் வர வேண்டும் என்று சாயா உத்தரவிட்டுள்ளாராம்.இதனால் சென்னைக்கும், கொச்சினுக்கும், ஹைதராபாத்துக்குமாக அந்த பார்ட்டிஅலைந்து திரிந்து கொண்டிருக்கிறதாம்.எப்படி அலைந்தும் இன்னும் ஒரு வாய்ப்பும் குதிராததால் சோர்ந்து போயுள்ளாராம்சாயா.கிளாமர் காட்டுவதில் தனது கொள்கையை மிக நன்றாகவே தளர்த்தியுள்ளாராம் சாயா.இதையும் அந்த மீடியேட்டர் தான் கோலிவுட்டில் பரவ விட்டுக் கொண்டிருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil


சாயா சிங் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட தீவிரமாக இருக்கிறார்.வாய்ப்பு பிடிப்பதற்காக சம்பளத்திற்கு ஒரு ஆளைப்போட்டு கோலிவுட்டில் அவரைசுற்ற விட்டுள்ளார்.

திருடா திருடிக்குப் பிறகு சுத்தமாக ஆளே காணாமல் போய் விட்டார் சாயா சிங்.மன்மத ராசா பாட்டுக்கு அவர் போட்ட குத்தாட்டத்தைத் தொடர்ந்து நல்ல பேர்கிடைத்தது.


ஆனால் ஏகப்பட் பந்தா காட்டியதால் சாயா சிங்கை அண்ட ஒரு ஆளும் இல்லாமல்போய் விட்டது. இதனால் நொந்து நூலான சாயா சிங் ஒத்தப் பாட்டுக்காச்சும்கூப்பிடுங்கப்பா என்று கோலிவிட்டில் நூல் விட்டுப் பார்த்தார்.

விஜய் படத்தில் ஒரு பாட்டுக்குக் குத்த கூப்பிட்டனுப்பினார்கள். அத்தோடு சரி,குத்தாட்டத்திற்கும் வாய்ப்பு வரவில்லை.

விவேக்குடன் 2வது நாயகியாக சொல்லி அடிப்பேன் படத்தில் நடித்து வரும்சாயாவுக்கு அதை விட்டால் வேறு படம் கையில் இல்லை.

ஆனால் சொல்லி அடிப்பேன் படம் இன்னும் முடிந்த பாடில்லை. இப்போது தான்அடுத்த கட்ட ஷூட்டிங்கை (இன்னுமா?) ஆரம்பித்துள்ளார்களாம். விரைவில்(எப்படியாச்சும்!) வெளியாகி விடுமாம்.


இந்தப் படத்தை நம்பிக் கொண்டிருந்தால் கதை கந்தல் தான் என்பதால் தெலுங்கில்முயற்சித்துப் பார்த்தார் சாயா சிங். முடியவில்லை.

எங்க வேகத்துக்கு நீங்க சரிப்பட மாட்டீங்க என்று மணவாடுகள் தெள்ளத் தெளிவாகசொல்லி அனுப்பி விட்டார்கள்.

வெறுத்துப் போன சாயாவுக்கு தாயகமான கன்னடம் கொஞ்சம் கை கொடுத்தது.

இருந்தாலும் 10 கன்னடப் படத்தில் நடிப்பது, ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்கு சமம்என்ற அளவுக்கு தமிழ்ப் படங்களுக்கு படு கிரேஸ் இருப்பதால் (கன்னடத்தில்சம்பளம் அப்படி) மீண்டும் தமிழில் காலூன்ற முடிவு செய்து தீவிர முயற்சிகளில்இறங்கியுள்ளார் சாயா சிங்.

இதற்காகவே கோலிவுட் சமாச்சாரங்கள் நன்கு தெரிந்த ஒரு மீடியேட்டரைப் பிடித்துசம்பளத்திற்குப் போட்டுள்ளார்.


அந்த அங்கிள், சாயாவின் லேட்டஸ்ட் ஆல்பத்துடன் கோலிவுட்டை வலம் வந்துவாய்ப்பு கேட்டு வருகிறார்.

கோலிவுட்டில் மட்டும் சுற்றிக் கொண்டிருக்காமல் அப்படியே மலையாளம்,தெலுங்குப் பக்கம் போய் வர வேண்டும் என்று சாயா உத்தரவிட்டுள்ளாராம்.

இதனால் சென்னைக்கும், கொச்சினுக்கும், ஹைதராபாத்துக்குமாக அந்த பார்ட்டிஅலைந்து திரிந்து கொண்டிருக்கிறதாம்.

எப்படி அலைந்தும் இன்னும் ஒரு வாய்ப்பும் குதிராததால் சோர்ந்து போயுள்ளாராம்சாயா.

கிளாமர் காட்டுவதில் தனது கொள்கையை மிக நன்றாகவே தளர்த்தியுள்ளாராம் சாயா.இதையும் அந்த மீடியேட்டர் தான் கோலிவுட்டில் பரவ விட்டுக் கொண்டிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil