»   »  சிக்கலில் மாயக்கண்ணாடி!

சிக்கலில் மாயக்கண்ணாடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேரன் நடிப்பு பிளஸ் இயக்கத்தில் உருவாகி வரும் மாயக்கண்ணாடி மற்றும் நடித்துள்ள ஆடும் கூத்து ஆகிய இரு படங்களும் ரிலீஸாவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.

தவமாய் தவமிருந்து படத்திற்குப் பிறகு இரு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டார் சேரன். அதில் ஒன்று ஆடும் கூத்து. மலையாள இயக்குநர்டி.வி.சந்திரன்தான் இயக்குநர். இன்னொரு படம் மாயக்கண்ணாடி. இந்தப் படத்தில் நடிப்பதோடு, இயக்கவும் செய்கிறார் சேரன்.

இரு படங்களிலும் நவ்யா நாயர்தான் ஹீரோயின். மாயக்கண்ணாடி படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரிக்கிறார். அவரது ஆஸ்தானஇசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

ஆடும் கூத்து படத்தின் தயாரிப்பு நிதிப் பிரச்சினையால் தாமதப்பட்டபோது நவ்யா நாயரும், சேரனும் ஆளுக்குப் பாதியாக செலவுகளை ஏற்பதாககூறியதால் படம் வேகமாக வளர்ந்தது.

கடந்த அக்டோபரிலேயே இப்படம் முடிந்து விட்டது. தேசிய விருதுக்கான போட்டிக்கும் கூட படத்தை அனுப்பி விட்டனர். ஆனால் தியேட்டர்களில்ரிலீஸ் செய்வதற்கு முன்பு அதில் சில விஷயங்களை சேர்க்க சேரன் விரும்பியதால் படம் ரிலீஸாகமல் உள்ளது.

சேரனின் இந்த தலையீட்டால் டி.வி.சந்திரன் அப்செட் ஆகியுள்ளாராம். படத்தை எப்படி எடுத்னோ அப்படித்தான் வெளியிட வேண்டும் என சந்திரன்ஒற்றைக்காலில் நிற்கிறாராம். மலையாளத்திலும் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்தப் பிரச்சினையால் இப்படத்தை தமிழில் வெளியிடக் கூடாது என்று கூறி வருகிறாராம் சேரன்.

இது ஒரு பக்கம் இருக்க, தீபாவளிக்கு திட்டமிடப்பட்ட மாயக்கண்ணாடியும் தாமதமாகி வருகிறது. அடுத்த தீபாவளிக்காவது படம் வருமா என்பதுகேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் காட்சியைக் கூட தயாரித்து விட்டனர். ஜெயா டிவியிலும் கூட அது ஒளிபரப்பானது.

படம் ஏன் தாமதம் ஆகிறது என்று நாம் விசாரித்தபோது, படம் நிதிப் பிரச்சினையால் திக்கித் திணறி வருவதாக தகவல் கிடைத்தது. பஞ்சுஅருணாச்சலம், அகத்தியனை வைத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் ராஜ்ஜியம் என்ற படத்தைத் தயாரித்தார்.

ஆனால் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை. எனவே படம் ரிலீஸாகமல் அப்படியே கிடக்கிறது. இந்தப் படத்தால் 2 கோடிவரைக்கும் அவர் நஷ்டமாகி விட்டது.

இதைத் தொடர்ந்து தங்கர் பச்சானை வைத்து சொல்ல மறந்த கதையைத் தயாரித்தார். அதில் சேரன்தான் நாயகன். இந்தப் படம் மாராக ஓடியும் கூடபஞ்சுவின் பிரச்சினையைத் தீர்க்க உதவவில்லை.

இதையடுத்து தனக்காக ஒரு படம் செய்து தருமாறு சேரனை அணுகினார் பஞ்சு. அவரும் ஒத்துக் கொண்டார். படத்துக்கு டூரிங் டாக்கீஸ் என்றுபெயரிட்டனர். அதுதான் இப்போது மாயக்கண்ணாடியாக மாறியுள்ளது.

படத்திற்காக 5 கோடி வரை செலவிட்டுள்ளார் பஞ்சு. ஆனால், படத்தை வாங்க இப்போது விநியோகஸ்தர்கள் தயங்குகிறார்களாம். எனவேசேரனையே இப்படத்தை ரிலீஸ் செய்யுமாறு கோரியுள்ளார் பஞ்சு. ஆனால் சேரனோ தயங்குகிறார்.

இந்தப் பிரச்சினையால் படம் ரிலீஸாகாமல் தொக்கி நிற்கிறதாம். இதுகுறித்து சேரனிடம் கேட்டபோது, எனது படங்கள் தொடர்பாக பல வதந்திகள்வருகிறது. அவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய தேவை எனக்கு இல்லை. மாயக்கண்ணாடி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் ஆடும்கூத்து பற்றி மட்டும் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என்றார்.

நவ்யா நாயருடன் சேர்த்து வைத்து வரும் வதந்திகள் குறித்து கேட்டபோது, நவ்யா சிறந்த நடிகை, அவரைப் போன்ற நடிகையை நான் பார்த்தததேஇல்லை. நல்ல மாணவரைப் பார்க்கும்போது எப்படி வாத்தியாருக்கு சந்தோஷம் வருமோ, அதுபோலத்தான் நவ்யாவை நான் பார்க்கிறேன்.

அந்த மாணவனை முன்னேற்ற வாத்தியாருக்கு எப்படி ஆர்வம் வருமோ அதுபோலத்தான் நானும் நடந்து கொள்கிறேன். நானும் ஒரு ஆசிரியரின்நிலையில் இருந்துதான் நவ்யாவை அணுகுகிறேன். ஆனால் தேவையில்லாமல் இப்படிப்பட்ட வதந்திகள் வருவதை நான் விரும்பவில்லை என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil