»   »  ராஜாவுக்கு சேரனின் மரியாதை!

ராஜாவுக்கு சேரனின் மரியாதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இசைஞானி இளையராஜாவின் மயக்கும் இசையில் உருவாகியுள்ள மாயக்கண்ணாடி படத்தின் பாடல் கேசட் நாளை வெளியிடப்படுகிறது.

சேரனின் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலத்தின் தயாரிப்பில் மாயக்கண்ணாடி உருவாகியுள்ளது. இயல்பான கதையை வெகு லாவகமாக கையாளும்வெகு சில இயக்குநர்களில் சேரனுக்கு முக்கிய இடம் உண்டு.

கற்பனை அதிகம் கலக்காமல், இயல்பாக கொடுக்கும் திறமை பெற்றவரான சேரனின் இயக்ககத்தில் உருவாகியுள்ள மாயக்கண்ணாடி பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடும் கூத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் சேரனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நல்ல நடிகை நவ்யா நாயர். படப்பிடிப்பு முடிந்து விட்டது. நாளைபாடல்களை வெளியிடுகிறார்கள். ஆல்பட் தியேட்டரில் சேரனுக்கே உரிய வித்தியாச பாணியில் பாடல் கேசட்டை வெளியிடுகிறார்கள்.

படு வித்தியாசமாக பாடல் கேசட் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை தயாரித்துள்ளனர். மாஸ்ட்ரோ இளையராஜாவுக்கு இது 31வது இசைவருடம் என்பதால், அதை முன்னிலைப்படுத்தி பாடல் கேசட்டுக்கான அழைப்பிதழை அச்சடித்துள்ளனர்.

ராஜாவைக் கெளரவிக்கும் வகையில், அவருக்கு முதன்மை இடம் கொடுத்துள்ளாராம் சேரன். ராஜாவின் பழைய புகைப்படங்களை கஷ்டப்பட்டுத்தேடி அந்தப் படங்களை அழைப்பிதழில் பிரசுரித்து அசத்தியுள்ளார்.

இதற்காக 1000 புகைப்படங்களை சேகரித்து அதிலிருந்து 50 அட்டகாசமான படங்களை செலக்ட் செய்து சேர்த்துள்ளார்.

30 வருடங்களை கடந்து 31வது வருடத்திலும் இமயம் போலவே உயர்ந்து நிற்கிறார் ராஜா. அன்னக்கிளி தொடங்கி மாயக்கண்ணாடி வரை அவரதுஇசையில் வெளியான அத்தனை பாடல்களும் மாயாஜாலம் புரியத் தவறியதில்லை.

இதில் விசேஷம் என்னவென்றால் ராஜாவின் முதல் படமான அன்னக்கிளியையும் பஞ்சுதான் தயாரித்தார். இப்போது 31வது வருடத்தில்வெளியாகும் மாயக்கண்ணாடியையும் அவரேதான் தயாரித்துள்ளார்.

பஞ்சு இதுவரை தயாரித்துள்ள 65 படங்களில் ராஜாவின் இசையில் வெளியானவை 62 படங்கள். மற்ற மூன்று படங்களில் ராஜாவின் வாரிசுகளானயுவன் சங்கர் ராஜாவும், கார்த்திக் ராஜாவும்தான் இசையமைத்துள்ளனர். இப்படி ராஜா குடும்பத்துடனேயே பஞ்சுவும் சேர்ந்து வளர்ந்துள்ளார்.

பஞ்சுவுக்கும், ராஜாவுக்கும் இடையிலான உறவு காதலன், காதலி உறவைப் போன்றது என்று கூடச் சொல்லலாம். காதலுக்கு மரியாதை கொடுக்ககாதலர்கள் எப்படி படாதபாடு படுவார்களோ அதைபோலத்தான் பஞ்சுவின் படம் சிறப்பாக வர வேண்டும் என ராஜாவும், ராஜாவின் நல்லிசையைப்பெற பஞ்சுவும் உயிரைக் கொடுத்து உழைப்பார்கள்.

உலகிலேயே ஒரு தயாரிப்பாளருக்கு அதிக அளவில் இசையமைத்துக் கொடுத்த இசையமைப்பாளர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். இதைஉணர்ந்து தானோ என்னவோ, பஞ்சுவின் மனம் கவர்ந்த ராஜாவை கெளரவப்படுத்தி மாயக்கண்ணாடி அழைப்பிதழை அசத்தலாக அடித்துள்ளார்சேரன்.

மாயக்கண்ணாடி பாடல் கேசட்டை இயக்குநர் பாரதிராஜா வெளியிடுகிறார். சிடியை பாலச்சந்தர் வெளியிடுகிறார். முதல் கேசட்டைகே.எஸ்.ரவிக்குமாரும், முதல் சிடியை நடிகர் சரத்குமாரும் பெற்றுக் கொள்கின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் விழாவுக்கு வரவுள்ளனர்.

மயக்க வாங்க ராசாக்களே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil