»   »  மாயக்கண்ணாடி - ஆடியோ ரிலீஸ்

மாயக்கண்ணாடி - ஆடியோ ரிலீஸ்

Subscribe to Oneindia Tamil

இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில், சேரனின் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள மாயக்கண்ணாடிபடத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா விமரிச்சையாக நடந்தது.

சேரன், நவ்யா நாயர் இணைந்து நடித்திருக்கும் மாயக்கண்ணாடி குறித்த எதிர்பார்ப்பு பெரிதாக உள்ளது. படத்தை அந்த அளவுக்கு வித்தியாசமாகஎடுத்திருக்கிறாராம் சேரன். அதை விட முக்கியமாக இளையராஜாவின் இசை குறித்த எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கிறது.

ராஜாவுக்கு இது 31வது இசை வருடம். எனவே மாயக்கண்ணாடி படத்தின் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ராஜாவைக்கெளரவிக்கும் வகையில், பாடல் கேசட் வெளியீட்டு விழா அழைப்பிதழில் ராஜாவின் புகைப்படங்களைப் போட்டு வித்தியாசமாக கெளரவப்படுத்திவிட்டார் சேரன்.

மாயக்கண்ணாடி ஆடியோ கேசட் மற்றும் சிடி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. ஆல்பட் தியேட்டரில் நடந்த இந்த விழாவில் சிடியை பாலச்சந்தர்வெளியிட அதை பாரதிராஜா பெற்றுக் கொண்டார். அதேபோல ஆடியோ கேசட்டை கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட சரத்குமார் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பாலுமகேந்திரா, பாலச்சந்தர், பாரதிராஜா, சரத்குமார் உள்ளிட்டோர் பேசினர். பாரதிராஜா பேசுகையில், சேரன் என்னை அப்பாஎன்றுதான் கூப்பிடுவார். அவரது தவமாய் தவமிருந்து படத்தைப் பார்த்த பின்னர், என்னை அப்பா என்று அழைப்பதற்காக பெருமைப்பட்டுபுளகாங்கிதம் அடைந்தேன்.

சேரனை நான் பார்க்கிறேன், அண்ணாந்து பார்க்கிறேன். ஒவ்வொரு இயக்குநருக்குள்ளும் ஓராயிரம் நடிகர்கள் இருப்பார்கள் என்று சேரன்சொல்வார். சொன்னதுபோல நடிகராகவும் சாதித்துக் காட்டி விட்டார்.

நவ்யா நாயர் கேரளத்துப் பொண்ணு. கேரளக்காரர்கள் தண்ணீர் கேட்டால் தர மாட்டேன் என்கிறார்கள். ஆனால் பொண்ணு கேட்டால் மட்டும் தந்துவிடுகிறார்கள். என் மருமகள் கூட கேரளாவைச் சேர்ந்தவர்தான் என்றார் பாரதி ராஜா.

பாலச்சந்தர் பேசுகையில், அன்னக்கிளியில் ராஜாவின் இசையை நான் ரசித்தேன். இசைக்காகவே அந்தப் படத்தை 3 முறை பார்த்தேன். இசையால்என்னை உலுக்கியவர் இளையராஜா.

அதேபோல இயக்கத்தால் என்னை உலுக்கியவர் பாரதிராஜா. இப்போது சேரனும் என்னை அவரது இயக்கத் திறமையால் உலுக்கியுள்ளார்.பாரதிராஜா மீது எந்தளவுக்கு எனக்கு காதல் இருக்கிறதோ, அதே அளவுக்கு சேரன் மீதும் காதல் கொண்டிருக்கிறேன் என்றார்.

இதேபோல சரத்குமார் பேசும்போதும் கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்களைத் திரையிட விடாமல் தடுப்பதைக் கண்டித்துப் பேசினார்.

நடிகர்கள் பிரகாஷ் ராஜ், நாசர், ராஜேஷ், விஜயக்குமார், ராதாரவி, பார்த்திபன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், இசைஞானிஇளையராஜா, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்மார், சீமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழா சாதாரண ஆடியோ கேசட் வெளியிடும் விழாவாக மட்டும் இல்லாமல், இசைஞானியைப் பாராட்டும் விழாவாகவும் அமைந்ததுகுறிப்பிடத்தக்கது.

Read more about: mayakannadi audio released
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil