'சேரன் தேடும் சீதை'

By Staff


'வாத்தியார்' எம்.ஜி.ஆர்., 'புரட்சித் தலைவி' ஜெயலலிதா நடித்த ராமன் தேடிய சீதை படத்தின் பெயரைக் கொண்டு உருவாகவுள்ள புதிய படத்தில் சேரன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கேற்ற நாயகியைத் தேட ஆரம்பித்துள்ளனர்.

மோசர் பெயர் நிறுவனம் சமீபத்தில் பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்தது. அதன் படி தற்போது மயிலு, அபியும் நானும், வெள்ளித்திரை என மூன்று படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் தனியாக மேலும் 3 படங்களை மோசர் பெயர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அதில் ஒரு படத்துக்கு ராமன் தேடிய சீதை என்று பெயரிட்டுள்ளனர். ஜெகன்ஜி இயக்குகிறார். சேரன்தான் நாயகன். அவருக்கு இணையான வேடத்தில் அசத்தல் நடிகர் பசுபதி நடிக்கிறார்.

சேரனுக்கேற்ற ஜோடியைத் தேட ஆரம்பித்துள்ளனர். சீக்கிரமே ஃபிக்ஸ் செய்து விடுவார்கள் என்று தெரிகிறது. வித்யாசாகர் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

அடுத்த படத்தை சசி இயக்குகிறார். படத்துக்கு பூ என பெயரிட்டுள்ளனர். கே.பாக்யராஜ் மூன்றாவது படத்தை இயக்கப் போகிறார். இதில் அவரது மகன் சாந்தனுதான் ஹீரோவாம். அவர் தற்போது சக்கரக்கட்டி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுதான் சாந்தனுவின் முதல் படம் என்பது நினைவிருக்கலாம்.

பாக்யராஜண்ணா, 'சக்கரக்கட்டியை' எப்பங்ணா சாப்பிட தருவீங்கோ!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X