»   »  சேரனின் 4 நாயகிகள்!

சேரனின் 4 நாயகிகள்!

Subscribe to Oneindia Tamil
Vimala Raman
சேரன் நாயகனாக நடிக்கும் ராமன் தேடிய சீதை படத்தில் அவருக்கு ஜோடியாக நான்கு நாயகிகள் நடிக்கவுள்ளனர். அதில் லேட்டஸ்டாக 3வது நாயகியாக விமலா ராமன் புக் ஆகியுள்ளார்.

கோடம்பாக்கம் என்ற, பேசப்பட்ட படத்தைக் கொடுத்தவர் ஜெகன்ஜி. அதற்கு முன்பாக புதிய கீதை என்ற படத்தையும் விஜய்யை வைத்து இயக்கினார்.

இந்த நிலையில் தற்போது சேரனை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். ராமன் தேடிய சீதை என்று படத்திற்குப் பெயரிட்டுள்ள ஜெகன்ஜி, படு வித்தியாசான கதையுடன் இப்படத்தைக் கொண்டு வரப் போகிறாராம்.

சேரனுக்கு இதில் நான்கு நாயகிகள் என முடிவு செய்துள்ளனர். அதில் சில நாட்களுக்கு முன்பு வரை 2 பேர் மட்டுமே இறுதியாகியிருந்தனர்.

கேரளத்து ரம்யா நம்பீசன், தூத்துக்குடி நாயகி கார்த்திகா ஆகியோரே அந்த இருவர். தற்போது 3வது நாயகியாக பொய் நாயகி விமலா ராமன் புக் ஆகியுள்ளார். சமீபத்தில் அவரை வைத்து சில டெஸ்ட் காட்சிகளை சுட்டாராம் ஜெகன்ஜி.

பொய் படத்திற்குப் பிறகு தமிழில் சரியான அழைப்புகள் வராததால், மலையாளப் பக்கம் ஒதுங்கி விட்ட விமலாவை இந்தப் படத்தின் கதையைச் சொல்லி மறுபடியும் தமிழுக்கு அழைத்து வந்துள்ளார் ஜெகன்ஜி.

படம் வித்தியாசமானதாக இருக்கும், ஒரு காட்சி கூட அனாவசியமானதாக இருக்காது என்று கையில் அடித்துச் சத்தியம் செய்கிறார் ஜெகன்ஜி.

கேட்க வித்தியாசமாக இருக்கிறது, பார்க்க விறுவிறுப்பாக இருக்குமா?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil