twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சேரனின் தவம்.. ரொம்ப நீளம் சேரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள தவமாய் தவமிருந்து மிக அழகாக வந்திருக்கிறதாம்.படம் தொடர்பாக வினியோகஸ்தர்களுடன் இருந்த வந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவாம். இதனால் விரைவில் ரிலீஸ்ஆகப் போகிறது.ஆனால், படத்தின் நீளம் தான் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கப் போகிறது என்கிறார்கள். படம் 20 ரீல்கள் உள்ளதாம்.என்னதான் அப்படி இப்படி வெட்டினாலும் தியேட்டரில் இந்தப் படம் 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடுமாம்.இவ்வளவு நேரம் அடக்கிக் கொண்டு ரசிகர்கள் அமர்வது கஷ்டம் என்பதால் இரண்டு இடைவேளைகளை விடத்தீர்மானித்திருக்கிறார்களாம். மேலும் இடைவேளையின்போது எழுந்து அப்படியே கொட்டாவி விட்டவாறு ரசிகர்கள் வீட்டுக்குப்போய்விடாமல் தடுக்க ஏதாவது சின்ன ஸ்னாக்ஸ் தரலாமா என்றும் யோசிக்கிறார்களாம்.இதையெல்லாம் எப்படி கோ-ஆர்டினேட் செய்வது, தியேட்டர்காரர்களை எப்படி இரண்டு இடைவேளைக்கு சம்மதிக்க வைப்பதுஎன்ற டிஸ்கஷன் தீவிரமாக நடந்து வருகிறது.இதில் நடித்துள்ள பத்மப்ரியாவுக்கு பிரேக் கிடைக்குமோ இல்லையோ நடிகரும் முன்னாள் இயக்குனருமான ராஜ்கிரணுக்கு நல்லமார்க்கெட் கிடைக்கும் என்கிறார்கள். அந்த அளவுக்கு மிகத் தத்ரூபமாக நடித்துக் கலக்கிவிட்டாராம்.படத்தைப் போட்டுக் காட்டியபோது வினியோகஸ்தர்களும் சேர்ந்து கலங்கியது தான் இதற்கு சாட்சி.இந்தப் படத்தை திரையிட்ட கையோடு தனது அடுத்த படமான அழகாய் இருக்கிறார் பயமாய் இருக்கிறது படத்தை ரிலீஸ்செய்யத் தயாராகிக் கொண்டிருக்கிறார் சேரன்.இந்தப் படத்தை சேரன் இயக்கவில்லை. அவரது ஆஸ்தான கேமராமேனான விஜய் மில்டன் தான் கதை, திரைக்கதை எழுதிஇயக்கிக் கொண்டிருக்கிறார்.இதில் பரத்துக்கு ஜோடியாக நடிக்கும் மல்லிகா கபூரும் நடிப்பில் சோடை போகவில்லையாம். படத்தில் ஒரு முக்கியமானவிஷேசம், இதில் டூயட் பாடல்களே கிடையாது. எல்லா பாடல்களையும் இசையமைத்துப் பாடியிருப்பது யுவன்சங்கர் ராஜாமட்டுமே. ஒரே ஒரு பாடலில் இளையராஜாவும் குரல் காட்டுகிறார்.மேலும் முதலில் நடனம் அமைத்துவிட்டு பின்னர் பாடல்களுக்கு டியூன் போட்டு பாடி அசத்தினாராம் யுவன். அப்பாவுக்கு சிறிதும்தப்பாத பிள்ளை என்று பாராட்டுகிறார் சேரன்.

    By Staff
    |

    சேரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள தவமாய் தவமிருந்து மிக அழகாக வந்திருக்கிறதாம்.

    படம் தொடர்பாக வினியோகஸ்தர்களுடன் இருந்த வந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவாம். இதனால் விரைவில் ரிலீஸ்ஆகப் போகிறது.

    ஆனால், படத்தின் நீளம் தான் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கப் போகிறது என்கிறார்கள். படம் 20 ரீல்கள் உள்ளதாம்.என்னதான் அப்படி இப்படி வெட்டினாலும் தியேட்டரில் இந்தப் படம் 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடுமாம்.

    இவ்வளவு நேரம் அடக்கிக் கொண்டு ரசிகர்கள் அமர்வது கஷ்டம் என்பதால் இரண்டு இடைவேளைகளை விடத்தீர்மானித்திருக்கிறார்களாம். மேலும் இடைவேளையின்போது எழுந்து அப்படியே கொட்டாவி விட்டவாறு ரசிகர்கள் வீட்டுக்குப்போய்விடாமல் தடுக்க ஏதாவது சின்ன ஸ்னாக்ஸ் தரலாமா என்றும் யோசிக்கிறார்களாம்.


    இதையெல்லாம் எப்படி கோ-ஆர்டினேட் செய்வது, தியேட்டர்காரர்களை எப்படி இரண்டு இடைவேளைக்கு சம்மதிக்க வைப்பதுஎன்ற டிஸ்கஷன் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதில் நடித்துள்ள பத்மப்ரியாவுக்கு பிரேக் கிடைக்குமோ இல்லையோ நடிகரும் முன்னாள் இயக்குனருமான ராஜ்கிரணுக்கு நல்லமார்க்கெட் கிடைக்கும் என்கிறார்கள். அந்த அளவுக்கு மிகத் தத்ரூபமாக நடித்துக் கலக்கிவிட்டாராம்.

    படத்தைப் போட்டுக் காட்டியபோது வினியோகஸ்தர்களும் சேர்ந்து கலங்கியது தான் இதற்கு சாட்சி.

    இந்தப் படத்தை திரையிட்ட கையோடு தனது அடுத்த படமான அழகாய் இருக்கிறார் பயமாய் இருக்கிறது படத்தை ரிலீஸ்செய்யத் தயாராகிக் கொண்டிருக்கிறார் சேரன்.


    இந்தப் படத்தை சேரன் இயக்கவில்லை. அவரது ஆஸ்தான கேமராமேனான விஜய் மில்டன் தான் கதை, திரைக்கதை எழுதிஇயக்கிக் கொண்டிருக்கிறார்.

    இதில் பரத்துக்கு ஜோடியாக நடிக்கும் மல்லிகா கபூரும் நடிப்பில் சோடை போகவில்லையாம். படத்தில் ஒரு முக்கியமானவிஷேசம், இதில் டூயட் பாடல்களே கிடையாது. எல்லா பாடல்களையும் இசையமைத்துப் பாடியிருப்பது யுவன்சங்கர் ராஜாமட்டுமே. ஒரே ஒரு பாடலில் இளையராஜாவும் குரல் காட்டுகிறார்.

    மேலும் முதலில் நடனம் அமைத்துவிட்டு பின்னர் பாடல்களுக்கு டியூன் போட்டு பாடி அசத்தினாராம் யுவன். அப்பாவுக்கு சிறிதும்தப்பாத பிள்ளை என்று பாராட்டுகிறார் சேரன்.

      Read more about: cherans tavamai tavamirindhu
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X