twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை பார்த்த முதல்வர் குடும்பத்தினர் முதலில் தயங்கினார்கள் -இயக்குநர் ராஜேஷ்

    |

    சென்னை: இயக்குநர் எம்.ராஜேஷ் அவர்கள் தற்சமயம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிக்கும் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

    ஸ்கிரீன் சீன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் அந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

    இந்நிலையில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தை பார்த்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களும் அவரது குடும்பத்தினரும் கொடுத்த விமர்சனத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் ராஜேஷ்.

    நடிகர் ரகுமானுக்காக காத்திருந்த முதல்வர் ஸ்டாலின்... தனது பண்பை வெளிப்படுத்தி வாழ்த்திய தருணம்நடிகர் ரகுமானுக்காக காத்திருந்த முதல்வர் ஸ்டாலின்... தனது பண்பை வெளிப்படுத்தி வாழ்த்திய தருணம்

    ஆதவன்

    ஆதவன்

    தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் முடிவெடுத்தபோது அப்போது இரண்டு வெற்றி படங்களை கொடுத்திருந்த இயக்குனர் எம்.ராஜேஷிடம் கதை கேட்டிருக்கிறார். ராஜேஷிற்கும் உதயநிதி அவர்களை வைத்து படம் இயக்கலாம் என்ற எண்ணம் ஆதவன் திரைப்படத்தை பார்த்துதான் வந்ததாம். அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சூர்யா, நயன்தாரா போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருப்பார். இருப்பினும் நடிப்பில் ஒரு தயக்கம் அவருக்குள் இருந்ததுபோல் எனக்கு தோன்றியது.

    ஒரு கல் ஒரு கண்ணாடி

    ஒரு கல் ஒரு கண்ணாடி

    ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அந்த தயக்கம் கூட அவரிடம் இல்லை. சிறப்பாக நடித்துக் கொடுத்தார் என்று பாராட்டியிருக்கிறார் ராஜேஷ். அவருக்கு கூச்சம் போக வேண்டும் என்பதற்காகவே முதல் நாள் படப்பிடிப்பை சத்தியம் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு தியேட்டர் வாசலில் அவர் நடனமாடும் காட்சியை எடுத்திருப்பார்.

    சிறப்புக் காட்சி

    சிறப்புக் காட்சி

    அப்போது ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கு அந்தப் படத்தின் சிறப்பு காட்சி ஒன்றை போட்டு காண்பித்தார்களாம். மூன்று நபர்கள் மட்டுமே திரையரங்கில் படம் பார்த்துள்ளனர். படம் பார்த்த பின்னர் அவர்கள் சற்று பயந்து போனார்களாம். இந்தக் கதை வெற்றி பெறுமா என்ற சந்தேகம் அவர்களுக்குள் எழுந்துள்ளது. அதை உதயநிதி அவர்களிடம் கூறவே அவரும் இயக்குநர் ராஜேஷிடம் வந்து படம் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதுபோல் கூறி இருக்கிறார்.

    ராஜேஷ் விளக்கம்

    ராஜேஷ் விளக்கம்

    அப்போது, ஒரு திரையரங்கில் மூன்று நபர்கள் பார்க்கும் பொழுது அந்த வைப் கிடைக்காது. மக்களோடு மக்களாக சேர்ந்து பார்க்கும் போது திரையரங்கமே ஒரு சூழ்நிலையை உருவாக்கி, படத்தை அனைவரும் ரசிக்க ஆரம்பிப்பார்கள். இன்னொரு விஷயம் என்னவென்றால் நம்முடைய படம் என்பதால் இது நன்றாக இருக்குமா இல்லையா வெற்றி பெறுமா இல்லையா என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி பார்க்கும்போது நம்மால் கணிக்க முடியாது. அதனால் பயப்படாதீர்கள், கண்டிப்பாக படம் வெற்றி பெறும் என்று ராஜேஷ் கூறினாராம். அதேபோல ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் நல்ல வெற்றி பெற்று இயக்குநர் ராஜேஷிற்கு ஹட்ரிக் படமாக அமைந்தது.

    English summary
    Director M. Rajesh is currently directing the film starring Jayam Ravi and Priyanka Mohan. Produced by Screen Scene Productions, Harris Jayaraj is composing the music for the film. In this case, Rajesh has said in an interview about the criticism given by Chief Minister Stalin and his family after watching the movie Oru Kal Oru Kannadi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X