கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கிய 'குட்டி' கமல், ஸ்ரீதேவி, ஷாலினி

By Siva

சென்னை: குழனந்தைகள் தினமான இன்று கோலிவுட்டை குழந்தைகளாக கலக்கிய நடிகர், நடிகைகளை பார்ப்போம்.

நாடு முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைவர்கள் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பல பிரபலங்கள் ட்விட்டரில் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தை நட்சத்திரங்களாக கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கிய நடிகர், நடிகைகளை பற்றி பார்ப்போம்.

கமல்

கமல்

உலக நாயகன் கமல் ஹாஸன் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதையடுத்து அவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,
நடிகர் திலகம் சிவாஜி உள்ளிட்ட பலருடன் சேர்ந்து நடித்துள்ளார். பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தபோதிலும் அவரின் நடிப்புத் திறமை மக்களின் கவனத்தை ஈர்த்தது.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டை கலக்கிய ஹீரோயின் ஸ்ரீதேவி. அவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

குட்டி பத்மினி

குட்டி பத்மினி

குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர் என்று தான் குட்டி பத்மினியை கூற வேண்டும். அவரது பெரிய கண்களும், நடிப்பும் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஷாலினி

ஷாலினி

சிறிது காலம் ஹீரோயினாக நடித்துவிட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவர் ஷாலினி. ஆனால் அவர் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பால் மக்களை தியேட்டருக்கு வர வைத்தவர் ஷாலினி. பேபி ஷாலினியின் ஹேர்ஸ்டைல் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாகும்.

சிம்பு

சிம்பு

ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார், ஆவேனே சூப்பர் ஸ்டார் என்று குட்டிப் பயலாக இருந்தபோது சிம்பு பாடினார். குழந்தை நட்சத்திரமாக சிம்பு மக்களிடையே மிகவும் பிரபலமானார். அடடா பொடியனாக இருந்தாலும் டி.ஆரின் வசனங்களை என்னமா பேசுகிறான் என்று மக்கள் வியந்தனர்.

ஸ்ரீதேவி விஜயகுமார்

ஸ்ரீதேவி விஜயகுமார்

விஜயகுமார், மஞ்சுளா தம்பதியின் இளையமகள் ஸ்ரீதேவி ஹீரோயினாக ஜொலிக்க முடியாவிட்டாலும் குழந்தை நட்சத்திரமாக ஒரு ரவுண்ட் வந்தார் என்று தான் கூற வேண்டும்.

ஷாமிலி

ஷாமிலி

ஷாலினியின் தங்கை ஷாமிலி ஒரு காலத்தில் படுபிசியான குழந்தை நட்சத்திரமாக இருந்தார். அவருக்காகவே இயக்குனர்கள் கதை எழுதி படம் எடுத்தனர். அஞ்சலி படத்தில் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருப்பார். அவர் கொஞ்சி கொஞ்சி பேசும் அழகே தனி தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X