கணவருடன் ஹைதராபாத் திரும்பினார் சிரஞ்சீவி மகள்

By Staff
Click here for more images

காதலரை ரகசியத் திருமணம் செய்து கொண்டு, டெல்லிக்குப் பறந்து போன தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீ, தனது கணவர் சிரீஷ் பரத்வாஜுடன் மீண்டும் ஹைதராபாத் திரும்பியுள்ளார்.

அக்டோபர் 17ம் தேதி தனது வீட்டை விட்டு வெளியேறி ஹைதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜம் கோவிலில் காதலர் பரத்வாஜை ரகசியத் திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீஜா.

இதனால் ஆந்திராவே அதிர்ந்து போனது. சிரஞ்சீவி குடும்பத்தினரும், அவரது ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கினர். திருமணம் செய்து கொண்ட பின்னர் ஸ்ரீஜாவும், பரத்வாஜும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் சென்னைக்குப் போயிருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் டெல்லிக்குப் போய் விட்டனர்.

டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகி, தனது தந்தையின் ரசிகர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும், பாதுகாப்பு தர வேண்டும் எனவும் கோரி வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஸ்ரீஜா மற்றும் பரத்வாஜுக்கு பாதுகாப்பு தர போலீஸாருக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஸ்ரீஜாவும், பரத்வாஜும் இன்று ஹைதராபாத் திரும்பினர். அங்கு செய்தியாளர்களை ஸ்ரீஜா, தனது கணவருடன் சந்தித்தார். அப்போது அவர்கள் கூறுகையில், தங்களுக்கு உரிய பாதுகாப்பு தரப்படும் என ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் பல்வீந்தர் சிங் உறுதி அளித்திருப்பதாகவும், அதனால்தான் திரும்பி வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஸ்ரீஜா கூறுகையில், எனது குடும்ப உறுப்பினர்கள் எனது திருமணத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எனது எதிர்காலம் குறித்து அவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். நான் இப்போது எனது மாமனார் வீட்டில் தங்கப் போகிறேன் என்றார்.

ஸ்ரீஜா தனது கணவருடன் மீண்டும் ஹைதராபாத் திரும்பியிருப்பதால் ஆந்திராவில் மீண்டும் பரபரப்பு கூடியுள்ளது. தனது வீட்டுக்கு ஸ்ரீஜா போவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Read more about: sreeja
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X