»   »  கோலிவுட்டின் 2வது தீபாவளி

கோலிவுட்டின் 2வது தீபாவளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீபாவளியன்று திரையிட தியேட்டர் கிடைக்காமல் போனது உள்ளிட்ட சிலகாரணங்களால் ரிலீஸாகமல் போன புதிய படங்கள் இந்த மாதம் திரைக்கு வருகின்றன.இதனால் கோலிவுட்டில் 2வது தீபாவளி கொண்டாட்ட உணர்வு ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி அஜீத்தின் வரலாறு, விஜயகாந்த்தின் தர்மபுரி,ஆர்யாவின் வட்டாரம், சிம்புவின் வல்லவன், சரத்குமாரின் தலைமகன் என பெரும்புள்ளிகளின் படங்கள் வெளியாகின.

இதனால் பயந்து போன சில ஹீரோக்கள், தங்களது படங்களை சற்றே காலம் தாழ்த்திவெளியிட முடிவு செய்தனர். சில படங்களுக்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்கவில்லை.இதனால் அவையும் ரிலீஸ் ஆகவில்லை. இப்படியாக நிறையப் படங்கள் தேங்கிப்போய் விட்டன. அவை அத்தனையும் அடுத்தடுத்து ரிலீஸாகி வருகின்றன.

பாவ்னா- ஸ்ரீகாந்த் நடித்துள்ள கிழக்குக் கடற்கரைச் சாலை, மல்லிகா கபூர்- அர்ஜூனின்வாத்தியார் ஆகிய படங்கள் இன்று ரிலீஸ் ஆகியுள்ளன. மற்ற படங்கள் வருகிற 17ம்தேதி வெளியாகின்றன.

வாத்தியார் படம் தீபாவளிக்கே வந்திருக்க வேண்டியது. சில பல பிரச்சினைகளால் வரமுடியாமல் போய் இப்போது வந்துள்ளது. பாவ்னாவின் கிழக்குக் கடற்கரைச் சாலைபடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படங்கள் தவிர விஷாலின் சிவப்பதிகாரம், மாதவன், அனுஷ்கா, ரீமா சென்நடிப்பில் உருவாகியுள்ள ரெண்டு, பரத், பாவனாவின் வெயில் ஆகிய படங்கள் 17ம்தேதி ரிலீஸாகின்றன.

முன்னாள் குட்டி பாப்பா கல்யாணி நடித்துள்ள பிரதி ஞாயிறு காலை 9 முதல் 10.30வரை, ஆவணித் திங்கள் ஆகிய படங்களும் இம்மாதம் ரிலீஸ் ஆகின்றன.

கே.பாலச்சந்தரின் 101வது படமான பொய் படம் இம்மாத ரிலீஸ் பட்டியலில் உள்ளது.ஆனால் எப்போது வரும் என்பது தெரியவில்லை.

அடுத்தடுத்து நிறையப் புதுப்படங்கள் ரிலீஸ் ஆவதால் கோலிவுட் ஆட்கள் மத்தியில்இது 2வது தீபாவளியைப் போல கொண்டாட்ட, பரபரப்பு உணர்வு நிலவுகிறது.

Read more about: second diwali in kollywood

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil