சிக்கலில் நெஞ்சிருக்கும் வரை
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியுள்ள நெஞ்சிருக்கும் வரை படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை சொந்தம்கொண்டாடி இன்னொருவரும் புகார் கொடுத்துள்ளார். இதனால் சிக்கல் பெரிதாகியுள்ளது.
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் நரேன், தீபா ஜோடியில் உருவாகியுள்ள நெஞ்சிருக்கும் வரை படம்ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தனக்குச் சொந்தமானது என்றுகூறி தயாரிப்பாளர் குஞ்சுமோனின் மகன் எபி குஞ்சுமோன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.இந்தப் புகாரை வடபழனி போலீஸார் விசாரணைக்கு ஏற்றுள்ளனர். இந்த நிலையில் தற்போது மேலும் ஒருவரும்இந்த கிளைமாக்ஸ் காட்சியை சொந்தம் கொண்டாடி போலீஸில் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்புஅதிகமாகியுள்ளது.
செல்வம் கலியுல்லாக் என்பவர் இதுதொடர்பாக மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ளபுகாரில், கடந்த 1990ம் ஆண்டு நான் இயக்கிய காதல் வேதம் என்ற நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சியைத்தான்நெஞ்சிருக்கும் வரை படத்தில் வைத்துள்ளனர். எனவே எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என கோரியுள்ளார்.
இந்தப் புகாரும் வடபழனி உதவி ஆணையர் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார்களால்கோலிவுட்டில் பரபரப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications