»   »  யுஎஸ் நூலகத்தில் கன்னத்தில் முத்தமிட்டால்

யுஎஸ் நூலகத்தில் கன்னத்தில் முத்தமிட்டால்

Subscribe to Oneindia Tamil

மணிரத்தினத்தின் அற்புதப் படைப்புகளில் ஒன்றான கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்குப் புதிய பெருமைகிடைத்துள்ளது. அமெரிக்க பொது நூலகம் ஒன்றில் இந்தப் படத்தை நிரந்தரமாக இடம் பெறச் செய்துள்ளனராம்.

இலங்கை இனப் பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் கன்னத்தில் முத்தமிட்டால். ஒருதாய்க்கும், குழந்தைக்கும் இடையிலான உணர்ச்சிப் பெருக்கை படு அழகாக காட்டியிருப்பார் மணி.

உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் கன்னத்தில் முத்தமிட்டால். இப்படத்திற்கு இப்போதுஇன்னொரு புதிய பெருமையும் கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் இவான்ஸ்டன் நகர பொது நூலகத்தில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் கடந்த 18ம் தேதிதிரையிடப்பட்டது. இப்படத்தை இந்தியர்கள் மட்டுமல்லாது, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, பிரேசில்,வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கண்டு மகிழ்ந்தனர்.

ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடப்பட்ட இப்படத்தைப் பார்த்த அனைவரும் அதை வெகுவாக பாராட்டினர்.இதையடுத்து இப்படத்தை நூலகத்தில் நிரந்தரமாக சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

இதன் டிவிடி இனிமேல் இந்த நூலகத்தில் வாடகைக்குக் கிடைக்கும். ஒரு வாரத்திற்கு ஒரே ஒரு டாலர் மட்டும்கட்டணமாக செலுத்தி வாடகைக்கு எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மணிரத்தினத்திற்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பெருமையான விஷயம்தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil