»   »  கட்டண குறைப்பு: சிவாஜிக்கு ஆப்பு?

கட்டண குறைப்பு: சிவாஜிக்கு ஆப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் சிவாஜி படத்துக்கு ஆப்பு வைக்கவேதியேட்டர் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்கும் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதாக திரையுலகில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

சமீபத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன்தலைமையில் திரைப்படத் துறையினர் முதல்வர் கருணாநிதியை சந்தித்துதியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.

மனு கொடுத்து விட்டு அவர்கள் போன பின்னால், டிக்கெட் கட்டணத்தைக்குறைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. ஜனவ> 1ம் தேதி முதல் இது அமலுக்குவருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

தியேட்டர் டிக்கெட்டைக் குறைத்தது மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும்கூட திரைத் துறையினர் மத்தியில் குறிப்பாக தியேட்டர் அதிபர்கள் மத்தியில்சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சிவாஜி படத்தின் வசூலைக் குறி வைத்தே இந்த டிக்கெட் கட்டணக் குறைப்பு எனஅவர்கள் மத்தியில் முனுமுனுப்பு எழுந்துள்ளது.

அதேசமயம், குண்டக்க மண்டக்க சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் இனிமேல்சம்பளத்தைக் குறைத்தே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகியிருப்பதாகவும்கோலிவுட்டில் ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

உண்மைதான் என்ன?

ஏவி.எம். நிறுவன தயா>ப்புதான் சிவாஜி. பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில்,ரஜினி நடிக்க உருவாகி வருகிறது சிவாஜி. தமிழ் சினிமாவிலேயே இதுவரை இல்லாதஅளவுக்கு மிகப் பெரும் பொருட் செலவில் சிவாஜி உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட50 கோடி பணத்தை இப்படத்துக்காக ஏவி.எம் முதலீடு செய்துள்ளதாம்.

படம் குறித்த எதிர்பார்ப்பு ஏகமாக இருப்பதால், படத்தை வாங்க வினியோகஸ்தர்கள்மத்தியில் பயங்கர போட்டியாம். இந் நிலையில் சமீபத்தில் ஷங்கருடன், ஏவி.எம்.சரவணனின் மகனும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான எம்.எஸ்.குகன் படத்தின்செலவு எகிறிக் கொண்டே போவது குறித்து கவலையோடு விவாதித்துள்ளார்.

அவரை அமைதிப்படுத்திய ஷங்கர், ஒரு பிரிண்ட்டுக்கு 50 லட்சம் ரேட் வைப்போம்.செலவு தானாக சரியாகி விடும் என கணக்கு போட்டுக் கொடுத்துள்ளார். ஒருபிரிண்டுக்கு 50 லட்சம் ரேட் வைத்தால், தியேட்டர்களில் டிக்கெட்டை குறைந்தது 200.தல் 300 ரூபாய் வரை வைத்தால்தான் உண்டு.

மேலும் பிரிண்ட்டுக்கு 50 லட்சம் கொடுக்க வினியோகஸ்தர்கள் முன் வருவார்களா?அதிக கட்டணத்திற்கு டிக்கெட் எடுத்துப் படம் பார்க்க ரசிகர்கள் முன்வருவார்களாஎன்ற சந்தேகத்தை குகன் எழுப்பியுள்ளார்.

அதற்கு சந்திரமுகியை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார் ஷங்கர். ரஜினி படத்திற்காகமக்களிடமிருந்து எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் கறக்கலாம் என்பதுஷங்கரின் ஐடியாவாம்.

இப்படித்தான் முன்பு அந்நியன் படத்தை பிரமாண்டமாக தயாரித்து முடித்து விட்டுஅப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் போய், படம் ரிலீஸான முதல் சிலவாரங்களுக்கு தியேட்டர்காரர்கள் தங்கள் இஷ்டத்திற்கு கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து அந்த சலுகையை அறிவித்தார் ஜெயலலிதா. இதனால் அந்நியன் படம்வசூலை வாரிக் கொட்டியது. இதை மனதில் வைத்துத்தான் சிவாஜி படத்தையும்பெரிய விலைக்கு விற்று வசூலை கலக்கி விடலாம் என ஷங்கர் ஐடியா செய்திருந்தார்.

இந்த இடத்தில்தான் தயாரிப்பாளர்கள் கூட்டாக சேர்ந்து பெரிய ஆப்பாகவைத்துள்ளனர். நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என நீண்டகாலமாக அவர்கள் கோரி வருகின்றனர். ஆனால் நடிகர்கள் அதைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

நேத்து முளைத்த சிம்பு, தனுஷ் வரையிலும் கோடிகளைத்தான் சம்பளமாகவாங்குகின்றனர். பரத் கூட தனது சம்பளத்தை வெகுவாக உயர்த்தி விட்டதாக கேள்வி.

இவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வரலாம் என யோசித்த தயாரிப்பாளர்களுக்குக்கிடைத்த யோசனைதான் இந்த டிக்கெட் கட்டணக் குறைப்பு.

டிக்கெட் கட்டணத்தைக் குறைத்தால் படங்களுக்கு வசூல் குறையும். வசூல்குறைந்தால் அதைக் காரணம் காட்டி ஹீரோக்களின் சம்பளமும் ஆட்டோமேட்டிக்காககுறையும். அப்படியும் குறைக்க அவர்கள் முன்வராவிட்டால் கட்டம் கட்டி விடலாம்என்பதுதான் தயாரிப்பாளர்களின் திட்டமாம்.

இதை மனதில் வைத்துத்தான் ராம. நாராயணன் தலைமையில் முதல்வர்கருணாநிதியிடம் ஓடிச் சென்று டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க கோரினர்.கருணாநிதியும் கட்டணத்தைக் குறைத்து உத்தரவிட்டுள்ளார் என்கிறார்கள்.

தமிழக அரசின் இந்த அதிரடி உத்தரவால் சிவாஜி பட யூனிட்தான் பெரும்அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறதாம். குண்டக்க மண்டக்க செலவை செய்தாகி விட்டது.அதிக விலைக்கு விற்று விடலாம் என்ற திட்டத்தில் இருந்தபோது இப்படி கட்டணக்குறைப்பை அரசு அறிவித்துள்ளதால் நினைத்த ரேட்டுக்கு படத்தை விற்க முடியாது.

அதே போல படம் வெளியான முதல் 3 வாரத்துக்கு கண்டமேனிக்கு டிக்கெட்விலையை உயர்த்திக் கொள்ள தியேட்டர்களாலும் முடியாது.

இதனால் சந்திரமுகியைப் போல சிவாஜி படமும் குறுகிய காலத்தில் வசூலைஅள்ளும் வாய்ப்பும் பறி போய் விட்டது. வழக்கமாக 25 நாட்களில் கிடைக்கும்வசூலை, புதிய உத்தரவு காரணமாக 50 நாட்களில்தான் ஈட்ட முடியுமாம்.

இதேபோல அதிர்ச்சியில் மூழ்கியிருக்கும் இன்னொரு டீம் கமல்ஹாசனின் தசாவதாரம்யூனிட். இந்தப் படமும் பெரிய பட்ஜெட் படம்தான். கிட்டத்தட்ட ரூ. 35 கோடி வரைமுதலீடு செய்துள்ளார்களாம்.

ஆரம்ப வாரங்களில் வசூலை பார்த்தால்தான் தொடர்ந்து படம் ஓட ஓட லாபமும்அதிகரிக்கும் என்பது இப்படங்களின் தயாரிப்பாளர்கள் எண்ணம். ஆனால் அதில்மண் அள்ளிப் போடுவது போல டிக்கெட் கட்டணக் குறைப்பு வந்து சேர்ந்துள்ளது.

தமிழக அரசு இப்படிக் கட்டணத்தைக் குறைத்திருப்பதால் பெரிய பட்ஜெட்டைகொட்டி படங்கள் எடுக்க யாரும் இனி முன்வர மாட்டார்கள் என்று தயாரிப்பாளர்கள்மற்றும் ரிஸ்க் எடுக்கக் கூடிய கலைஞர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளதாம்.

இதற்கு அவர்கள் இன்னொரு உதாரணத்தையும் சுட்டிக் காட்டுகிறார்கள். சென்னை,மதுரை, கோவை ஆகிய பெருநகரங்களில் முன்பு போல டப்பா தியேட்டர்கள்இப்போது இல்லை. அதி நவீன வசதிகளை தியேட்டர்களில் ஏற்படுத்தி வருகிறார்கள்.

படங்களைப் போல, தியேட்டர்களும் இப்போது பெரும் பொருட் செலவில்மாற்றியமைக்கப்படுகின்றன. பணத்தைக் கொட்டி தியேட்டர்களை அலங்க>க்கிறார்கள்.

குறிப்பாக சென்னையில் மல்டிப்ளக்ஸ் கலாச்சாரம் படு வேகமாக பரவி வருகிறது.முதலில் சங்கம் திரையரங்க வளாகம் உருவானது. பின்னர் அபிராமி மெகா மால்வந்தது. இப்போது ராதாகிருஷ்ணன் சாலையில், துபாயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர்பணத்தைக் கொட்டி நான்கு தியேட்டர்களை ஒரே வளாகத்தில் கட்டியுள்ளார்.

இங்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளனர். டிக்கெட்டுடன் ஒரு மெனுவையுயம்கையில் கொடுப்பார்கள். அதில் உள்ள சாப்பாட்டு வகைகளை சீட்டில் இருந்தபடிஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டுக் கொண்டே படத்தை ரசிக்கலாம்.

இந்தத் தியேட்டரில் ஒரு டிக்கெட்டின் விலை எவ்வளவு தெரியுமா? அதிகம் இல்லை,600 ரூபாய்தான்! ஆனால் தமிழக அரசின் தற்போதைய அதிரடி உத்தரவால்,அதிகபட்சம் 50 ரூபாய்தான் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும்.பணத்தை கோடி கோடியாக கொட்டி தியேட்டர்களை கட்டி விட்டு 50 ரூபாய்க்குடிக்கெட் என்றால் எப்படி என்று தியேட்டர்காரர்கள் புலம்புகின்றனர்.

இதேபோல அமைந்தகரையில் ஒரே இடத்தில் ஏழு தியேட்டர்கள் கட்டப்பட்டுவருகிறது. மேலும் சில இடங்களிலும் மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் உருவாகிக்கொண்டு வருகின்றன.

கட்டணக் குறைப்பால் இன்னொரு புதிய பிரச்சினையும் உருவாகும் என்றுகூறுகிறார்கள். அதாவது இப்போது பாதி டிக்கெட்டுகள் பிளாக்கில்தான்விற்கப்படுகின்றன. அதிக விலை வைத்து அவற்றை விற்கிறார்கள். இனிமேல் 90சதவீத டிக்கெட்டுகளை தியேட்டர்காரர்களே பிளாக்கில் விற்கும் நிலை உருவாகும்என்பதுதான் அந்தப் பிரச்சினை.

எனவே கட்டணக் குறைப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறுவது குதிரைக்கொம்புதான் என்கிறார்கள்.

தயாரிப்பாளர்களில் ஒரு தரப்பினரே இந்த சலுகையை கடுமையாக எதிர்க்கிறார்கள்.முதல்வரைப் போய் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைத்தவர்கள் யார்? ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியன், கே.ஆர்.ஜி, கலைப்புலி சேகரன் ஆகியோர்தான்.இவர்கள் யாருமே இப்போது படமே தயாரிப்பதில்லை.

படத் தயாரிப்பிலேயே இல்லாதவர்கள் வைத்த கோரிக்கையை அரசு ஏற்றிருப்பதுஎந்த வகையில் நியாயம் என்கிறார்கள் அவர்கள். தயாரிப்பாளர்களின் உண்மைநிலவரத்தை ஏவி.எம்.சரவணன், ஷங்கர், ரஜினி, கமல் போன்றவர்கள் முதல்வர்கருணாநிதியை நேரில் சந்தித்து விளக்க வேண்டும் என்கின்றர்.

இந்தப் பிரச்சினை குறித்து ராம நாராயணன் கூறுகையில், நடுத்தர வர்க்க மக்கள்தியேட்டர்களுக்கே இப்போது வருவதில்லை. காரணம் அதிக விலைதான். வசூலைஅள்ளுகிறோம் என்ற பெயரில் இனிமேல் ஒரே நாளில் மக்களின் பணத்தை அள்ளிவிட முடியாது.

சிவாஜி படத்தை மனதில் வைத்து இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறுவதுநியாயமல்ல. ஏவி.எம். நிறுவனமும் எங்களது சங்கத்தில் ஒரு உறுப்பினர்தான்.

50 நாளில் சிவாஜி படம் எடுக்கப் போகும் வசூல் கட்டணக் குறைப்பால் 70நாட்களாக அதிகரிக்கும். அவ்வளவுதான் என்றார்.

தியேட்டர்காரர்கள் என்ன சொல்கிறார்கள்? பிரபல அபிராமி திரையரங்கஉரிமையாளரும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவருமானஅபிராமி ராமநாதன் கூறுகையில், மக்களுக்கு நிச்சயம் இது லாபம் தரும். ஆனால்தியேட்டக்காரர்கள்தான் அதிக நஷ்டத்தை சந்திப்பார்கள். போகப் போகத்தான் லாபம்கிடைக்கும்.

உடம்பு நன்றாக இருக்க கசப்பு மருந்து சாப்பிடுவது போல இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்கிறார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட் வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர்அருள்பதி கூறுகையில், திருட்டு விசிடி இனிமேல் கட்டுக்குள் வரும். கிட்டத்தட்டஅழிந்தே போகும். தியேட்டர்களுக்கு மக்கள் அதிக அளவில் வருவார்கள்.

அதேசமயம் பொங்கல் படங்களை மிக அதிக விலை கொடுத்து வாங்கி விட்டவினியோகஸ்தர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். சம்பந்தப்பட்ட படங்களின்தயாரிப்பாளர்களுடன் அமர்ந்து பேசி இதை வினியோகஸ்தர்கள் தீர்த்துக் கொள்வோம்என்றார்.

பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள விஜய்யின் போக்கிரி படம் ரூ. 19 கோடிக்குவிற்பனையாகியுள்ளதாம். அஜீத்தின் ஆழ்வார் ரூ. 14 கோடிக்கு விற்றுள்ளதாம்.இந்தப் படங்களுக்கு கட்டணக் குறைப்பால் பெரும் அடி விழும் என்கிறார்கள்.

இந்தப் பிரச்சினையை சமாளிப்பது எப்படி என்பது குறித்து ஆலோசிக்க தமிழ்நாடுதிரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. இதில்எடுக்கப்படும் முடிவுகளை முதல்வர் கருணாநிதிக்கும், ரஜினி, கமல் போன்ற முக்கியநடிகர்களுக்கும் அனுப்பி வைக்கவுள்ளனராம்.

டிக்கெட் கட்டணக் குறைப்பால் பிரமாண்டத் தயாரிப்பாளர்கள், பிரமாண்டஇயக்குநர்கள், சூப்பர் நடிகர்கள் மிரட்சிக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் கஷ்டப்பட்டுசம்பாதித்த பணத்தைக் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இந்தக் கட்டணக்குறைப்பு பெரும் நிம்மதியை நிச்சயம் தரும்.

தயாரிப்பாளர்கள் தப்ப ஒரே வழி, பட்ஜெட்டை குறைப்பது தான். பட்ஜெட்டை குறைக்க ஒரே வழி நடிகர்களின்சம்பளத்தை குறைப்பது தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil