»   »  தமிழுக்கு கேரளாவும் கட்டுப்பாடு!

தமிழுக்கு கேரளாவும் கட்டுப்பாடு!

Subscribe to Oneindia Tamil

கர்நாடகா, ஆந்திராவைத் தொடர்ந்து கேரள திரையுலகமும், தமிழ்ப் படங்களின் வேகத்தைக் குறைக்கும்நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தமிழ்ப் படங்களால் கன்னடப் படங்களுக்கு பெரும் அடி விழுந்ததால் தமிழ்ப் படங்களுக்கு குண்டக்க மண்டக்ககட்டுப்பாடுகளை விதித்தது கன்னடத் திரையுலகம். அவர்களின் விரட்டலால், கர்நாடக அரசும் தாறுமாறாகவரியைப் போட்டு வாட்டிப் பார்த்தது.

இத்தனை செய்தும் கூட கன்னடப் படங்களால் நிமிர முடியவில்லை, தமிழ்ப் படங்களின் வெற்றி வேகத்தைதடுக்கவும் முடியவில்லை.

இதே நிலைதான் சமீபத்தில் ஆந்திராவிலும் எழுந்தது. நேரடித் தமிழ்ப் படங்களும், டப்பிங் படங்களும் சக்கைபோடு போட நெரடி தெலுங்குப் படங்கள் பெரும் அடியை வாங்க ஆரம்பித்தன.

சிரஞ்சீவி படத்தை விட ரஜினிகாந்த்தின் சந்திரமுகி வசூலில் சாதனை படைத்ததைப் பார்த்து அரண்டு போனதுதெலுங்குத் திரையுலகம். இதையடுத்து சமீபத்தில், தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி தமிழ்ப்படங்களுக்கு பல்வேறு தடைகளைப் போட முடிவெடுத்தனர்.

டப்பிங் படங்களையும் இனி அனுமதிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தனர். இருப்பினும் இதற்கு பெரியஅளவில் தயா>ப்பாளர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லையாம். இதனால் முடிவை தற்போதைக்கு தள்ளிவைத்துள்ளனர்.

இந்த வரிசையில் இப்போது கேரள திரையுலகமும் சேர்ந்து கொண்டுள்ளது. தமிழ்ப் படங்களுக்கும்,பாடல்களுக்கும் கேரளாவில் பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.

தமிழ் சினிமா பாடல்கள் அங்கு சக்கை போடு போடுவது சாதாரணமான விஷயம். மலையாளப் பாடல்களை விடதமிழ் சூப்பர் ஹிட் பாடல்களைத்தான் அவர்கள் சர்வ சாதாரணமாக பாடிக் கொண்டிருப்பார்கள்.

இதேபோல ரஜினி, கமல் ஆகியோருக்கு கேரளாவில் பெருமளவில் ரசிகர்களும் உள்ளனர். இப்போது விஜய்,அஜீத்துக்கும் அங்கு கிரேஸ் கூடி விட்டது. சூர்யாவுக்கும் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

இப்படி படிப்படியாக தமிழ் சினிமாக்காரர்கள் கேரளாவில் செல்வாக்கு பெற்று வருவதைப் பார்த்து கேரளதிரையுலகினர் மிரண்டு போயுள்ளனர். கர்நாடகத்தைப் போலவே, கேரளாவிலும் தமிழ்ப் படங்கள் அப்படியேதிரையிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யும் அதே நாளிலேயே கேரளாவிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால் மலையாளப்படங்களின் வசூல் பாதிக்ப்படுவதாக வினியோகஸ்தர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

ரஜினியின் சிவாஜி படத்தை பாலக்காட்டைச் சேர்ந்த ஒரு வினியோகஸ்தர் ரூ. 3.5 கோடி கொடுத்து உரிமைவாங்கியுள்ளாராம். இது கேரள திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இப்படியே போனால் முண்டைத் தூக்கி தலையில் போட்டுக் கொண்டு போக வேண்டியதுதான் என்றபுலம்பல்கள் கூடியுள்ளதாம். சமீபத்தில் அங்கு விநியோகஸ்தர்கள் ரகசியமாகக் கூடி முக்கிய ஆலோசனைநடத்தியுள்ளனர்.

அதன்படி, இனிமேல் நேரடித் தமிழ்ப் படங்கள், தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகி பல வாரங்கள் கழித்தே கேரளாவில்திரையிடப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

இருப்பினும் இந்தக் கட்டுப்பாடு ரஜினி, கமல், விஜய், அஜீத் ஆகிய முன்னி ஹீரோக்களுக்குப் பொருந்தாதாம்.இவர்களின் படங்களை உடனுக்குடன் வெளியிட்டுக் கொள்ளலாமாம்.

முதலில் கர்நாடகா, பிறகு ஆந்திரா,இப்போது கேரளா என பக்கத்து மாநிலங்கள் எல்லாம் தமிழ் சினிமாவைஅடக்கி ஒடுக்க ஆர்ம்ஸ் முறுக்க ஆரம்பித்துள்ளன. கோலிவுட் என்ன பண்ணப் போகிறது?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil