»   »  பிரமிட் தயாரிக்கும் 25 படங்கள்!!

பிரமிட் தயாரிக்கும் 25 படங்கள்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் திரையுலகுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள முதல்வர் கருணாநிதியை பாராட்டும் வகையில் இந்த ஆண்டு எடுக்கப்படவுள்ள 25 புதியபடங்களுக்கு கருணாநிதி தலைமையில் பூஜை நடத்தப்படவுள்ளதாக தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் தெரிவித்துள்ளார்.

பிரமிட் நடராஜன் தனது பிரமிட் சாய்மிரா தியேட்டர்கள் நிறுவனம் சார்பில் 25 புதிய படங்களை தயாரிக்கவுள்ளார். இதற்கான பட்ஜெட்டாக ரூ. 200கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குநர்களைக் கொண்டு இந்தப் படங்கள் எடுக்கப்படவுள்ளன. திரையுலக மேம்பாட்டுக்காக பல்வேறு சலுகைகள்,வரிச் சலுகையை அறிவித்துள்ள முதல்வர் கருணாநிதியைப் பாராட்டும் வகையில், இந்தப் படங்களுக்கு கருணாநிதி தலைமையில் பூஜை போட முடிவுசெய்துள்ளார் நடராஜன்.

இதுகுறித்து நடராஜன் கூறுகையில், முன்பெல்லாம் கோடம்பாக்கத்தில் வருடத்திற்கு 150 படங்கள் தயாராகி வந்தன. ஆனால் இப்போது அவைபடிப்படியாக குறைந்து 80 படங்களாகிவிட்டன.

அதை மாற்ற பிரமிட் தியேட்டர் நிறுவனம் அதிக படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. எனவே இனிமேல் வருடத்திற்கு பழைய மாதிரியே150 படங்கள் வரும் என்றார்.

பிரமிட் சாய்மிரா தியேட்டர் நிறுவனம் என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு தியேட்டர்களை உறுப்பினராகக் கொண்ட நிறுவனம். இதில் 230தியேட்டர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மலேசியாவிலும் இந்த நிறுவனம் கிளை பரப்பவுள்ளது.

மலேசியாவின் சென்சூரியன் பெர்ஹார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து அங்கும் 150 தியேட்டர்களை திறக்கவுள்ளனர். இதேபோல,மும்பையைச் சேர்ந்த இனிபினிட்டி இந்தியா அட்வைசர் நிறுவனத்தின் கிளை அமைப்பான இனிபினிட்டி பிலிம் கம்பளீசன் சர்வீஸ் நிறுவனத்துடனும்ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதிய படங்களுக்கான தயாரிப்புச் செலவுக்குத் தேவையான நிதி தாராளமாக கிடைக்கும் என பிரமிட் நிறுவன நிர்வாக இயக்குநர்சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil